For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒபாமாவின் பேக்கேஜ்: பல 'ஐட்டங்களுக்கு' வெட்டு

By Sridhar L
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் நிதியுதவி மசோதாவில் இடம் பெற்றுள்ள பல ஷரத்துக்களுக்கான நிதியுதவியைக் குறைக்கவும், சிலவற்றுக்கு முழுமையாக நிதியுதவியை வழங்காமல் இருக்கவும் செனட் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இந்த மசோதா இன்றைக்குள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

நலிவடைந்து வரும் பொருளாதாரத்தை நிறுத்தவும், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு புத்துயிர் அளிக்கவும் 40 லட்சம் கோடி நிதியை ஒதுக்க ஒபாமா முடிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக மசோதா ஒன்றும் தயாராகியுள்ளது. இந்த மசோதாவுக்கு செனட் கமிட்டி ஒப்புதல் அளித்து விட்டது. அடுத்து செனட் சபை இதை நிறைவேற்ற வேண்டும்.

ஆனால் இவ்வளவு பெரிய தொகையை நிதியுதவியாக கொடுத்தால், நாடு பெரும் பாதிப்பை சந்திக்கும் என குடியரசுக் கட்சி செனட்டர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். மேலும், ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் சிலரும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.

இதையடுத்து மாற்றுக் கருத்துடன் கூடிய இரு தரப்பினரும் இணைந்து இந்த மசோதா குறித்து ஆய்ந்து சில பரிந்துரைகளை அளித்துள்ளனர். அதன்படி மசோதாவில் அறிவிக்கப்பட்டுள்ள நிதியின் அளவு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று செனட் சபையில் நிதியுதவி மசோதா நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

செனட்டர்களின் பரிந்துரைப்படி பாதியளவு மற்றும் முழுமையாக நிதியளவு குறைக்கப்பட்டுள்ள ஷரத்துகள்..

- அரசுக் கட்டடங்களுக்கு மின்வசதியை ஏற்படுத்துவதற்கான 7 பில்லியன் டாலரிலிருந்து 3.5 பில்லியனாக குறைப்பு.

- ஸ்மித்சோனியன் நிறுவனத்திற்கான நிதி 150 மில்லியன் டாலரிலிருந்து 75 மில்லியன் டாலராக குறைப்பு.

- சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்சியின் சூப்பர் நிதி 800 மில்லியன் டாலரிலிருந்து 200 மில்லியன் டாலராக குறைப்பு.

- தேசிய ஓசியானிக் மற்றும் அட்மாஸ்பரிக் நிர்வாகத்திற்கு 427 மில்லியன் டாலரிலிருந்து 100 மில்லியன் டாலராக குறைப்பு.

- சட்டத்துறை வயர்லஸ் செலவுகளுக்காக 200 மில்லியன் டாலரிலிருந்து 100 மில்லியனாக குறைப்பு.

- ஹைபிரிட் ரக அரசு வாகனங்களுக்கான செலவு 600 மில்லியனிலிருந்து 300 மில்லியனாக குறைப்பு.

- எப்.பி.ஐ.க்கான கட்டுமானச் செலவுகள் 400 மில்லியனிலிருந்து 100 மில்லியன் டாலராக குறைப்பு.

முழுமையாக நிதி வெட்டுக்குள்ளாகியுள்ளவை ...

- வரலாற்று ஆவண பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட 55 மில்லியன் டாலர் ரத்து.

- கடலோரப் பாதுகாப்புப் படையினருக்கான ஐஸ் வெட்டும் கருவிகள், ஐஸ் பிரேக்கர்கள் வாங்க ஒதுக்கப்பட்ட 122 மில்லியன் டாலர்.

- விவசாய சேவை நவீனமயமாக்கலுக்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் டாலர்.

- கூட்டுறவு ஆய்வு, கல்வி மற்றும் விரிவாக சேவைக்காக ஒதுக்கப்பட்ட 50 மில்லியன் டாலர்.

- நீர் மேலாண்மைக்கான 65 மில்லியன் டாலர் நிதி.

- தொலை தூரக் கல்விக்கான 100 மில்லியன் டாலர் நிதி.

- மீன் வளர்ப்புக்கான 50 மில்லியன் டாலர்.

- பிராட்பேண்ட் சேவைக்கான 2 மில்லியன் டாலர்.

- தேசிய தரம் மற்றும் தொழில்நுட்பக் கழகத்திற்கான 100 மில்லியன் டாலர்.

- சிறைகளுக்கு ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் டாலர்.

- மாகாண மற்றும் உள்ளூர் சட்டத்துறைக்கான 10 மில்லியன் டாலர்.

- நாசாவுக்கு ஒதுக்கப்பட்ட 50 மில்லியன் டாலர்.

- ஏரோநாட்டிக்ஸ் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட 50 மில்லியன் டாலர்.

- ஆய்வுப் பணிகளுக்கான 50 மில்லியன் டாலர்.

- தேசிய அறிவியல் கழகத்திற்கான 200 மில்லியன் டாலர்.

- அறிவியல் பிரிவுக்கான 100 மில்லியன் டாலர்.

- உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கான 50 மில்லியன் டாலர்.

- போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்திற்கான 200 மில்லியன் டாலர்.

- பள்ளிக் கட்டுமானத்திற்கான 16 பில்லியன் டாலர்.

- உயர் கல்வி நிறுவனங்களின் கட்டுமானத்திற்கான 3.5 பில்லியன் டாலர்.

இப்படி நிதி ரத்து செய்யப்பட்டவற்றின் பட்டியல் நீளுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X