For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்லம்டாக் மில்லியருனுக்கு 8 ஆஸ்கர் விருதுகள்

By Sridhar L
Google Oneindia Tamil News

லாஸ் ஏஞ்செல்ஸ்: ஸ்லம்டாக் மில்லியனர் படம் சிறந்த படத்துக்கான ஆஸ்ரையும், அதன் இயக்குனர் டேனி போயலுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தப் படம் மொதமதம் 8 விருதுகளை வென்றுள்ளது.

இதில் பணியாற்றிய இந்தியர்களான ரஹ்மான் 2 விருதுகளையும், சவுண்ட் மிக்சிங்குக்கு பூக்குட்டி ஒரு விருதையும் வென்றுள்ளனர். இந்தப் படத்துக்கான மற்ற ஆஸ்கர் மற்ற விருதுகளை வென்றவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சிறந்த திரைக்கதை தழுவல் (Best Adapted Screenplay) விருது இந்தப் படத்தின் கதாசிரியர் சிமேன் பியேபோய்க்கும், சிறந்த சினிமாட்டோகிராபிக்கான விருது ஆண்டனி டாட் மாண்டலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் மொத்தம் 10 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதில் இந்தப் படம் 8 விருதுகளை வென்றுள்ளது.

ஸ்லம்டாக் பெற்றுள்ள 8 ஆஸ்கர் விருதுகள்:

சிறந்த படம்
சிறந்த இயக்குனர்-டேனி போயல்
பெஸ்ட் ஒரிஜனல் ஸ்கோர் - ஏ.ஆர்.ரஹ்மான்
"ஜெய் ஹோ..." பாடல் - ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - ரிச்சர்ட் பிரைகே மற்றும் ரேசுல் பூகுட்டி
சிறந்த ஒளிப்பதிவு - ஆன்டனி டோட் மென்டில்
சிறந்த அடாப்டட் திரைக்கதை: சைமன் பியூஃபாய்
சிறந்த எடிட்டிங்: கிறிஸ் டிக்கன்ஸ்

டாகுமெண்டரி- இந்திய சிறுமியின் கதைக்கு ஆஸ்கர்:

அதே போல இந்தியாவைச் சேர்ந்த பிங்கு சோங்கர் என்ற 8 வயது சிறுமி குறித்த குறும்படமான ஸ்மைல் பிங்கி (Smile Pinki) படத்துக்கு இநத ஆண்டுக்கான சிறந்த டாகுமெண்டரிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

மிர்ஸாபூரைச் சேர்ந்த இந்தச் சிறுமியின் உதடு பிளந்த தோற்த்தால் (cleft lip) சமூகத்தால் ஒதுக்கப்படுகிறாள். அந்தச் சிறுமி படும்பாடு தான் இந்தப் படம். 40 நிமிடம் ஓடும் இந்தப் படம் இந்தி மற்றும் போஜ்பூரி மொழிகளில் தயாரிக்கப்பட்டதாகும். இதை இயக்கியவர் மேகன் மைலன்.

ஸ்லம்டாக் மி்ல்லியனர் குழுவை வாழ்த்த....

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X