For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சையில் முஸ்லீம் லீக் மாநாடு - கருணாநிதி வாழ்த்து

By Sridhar L
Google Oneindia Tamil News

Leaders at the Conference
தஞ்சாவூர்: தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மத்திய மண்டல மாநாடு தஞ்சையில் நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பியிருந்தார்.

முஸ்லிம் லீகின் கோரிக்கையை ஏற்று உலமாக்கள் பள்ளிவாசல் பணியாளர்களுக்கு நலவாரியம் அமைத்து தந்த முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசுக்கு நன்றி அறிவிப்பு மாநாடாக இந்த மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் கலந்துகொள்ள தஞ்சை வந்து மாநில நிர்வாகிகளுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தஞ்சையில் குவிந்தனர்.

தஞ்சை மாநகரெங்கும் பச்சை இளம்பிறை கொடி தோரணங்களாய் காட்சி அளித்தது.

மாநாட்டின் முதன் நிகழ்ச்சியாக இசையரங்கம் காலை 9. 30 மணியளவில் துவங்கியது. தஞ்சை நகராட்சி திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சோழபுரம் எஸ்.பி. முஹம்மதுஅலி நினைவுமேடையில் நடைபெற்ற இந்த இசை அரங்கில் முகவை சீனி முஹம்மது குழுவினர் தீனிசை பாடல்களை பாடி உற்சாகமூட்டினர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் எழுச்சிமிகு கருத்தரங்கம் துவங்கியது. கருத்தரங்கிற்கு மத்திய மண்டல மாநாடு வரவேற் புக்குழு தலைவர் எம். ஏ. குலாம் மைதீன் தலைமை தாங்கினார்.

எஸ்.எம். பதுருத்தீன் (மாநில சொத்து பாதுகாப் புக்குழு உறுப்பினர்)பி.எம். தாஜீத்தீன் (தஞ்சை மாவட்ட துணை தலைவர்) எஸ்.டி. அப்துல் ரஹீம் (தஞ்சை மாவட்ட துணைத் தலைவர்) மதுக்கூர் . ஏ.எம். அப்துல்காதர் (தஞ்சை மாவட்ட துணைத் தலைவர்) மௌலவி . டி. செய்யது காதர் உசேன் (தஞ்சை மாவட்ட துணைத் தலைவர்) பி.நூர் பாட்ஷா (தஞ்சை மாவட்ட துணைச் செயலா ளர்)எஸ்.எம். ஜெய்னுல் ஆபிதீன் (தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர்)கே.ஏ. ராஜா முஹம்மது ( தஞ்சை மாவட்ட காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர்) எஸ்.ஏ. ஷேக் அலாவுதீன் (திருவையாறு ஒன்றிய செயலாளர்) எப். அப்துல் கரீம் (வழுத்தார்) எஸ்.எம். ஏ.முகம்மது பாரூக் (தலைவர் அதிராம்பட்டினம்) ஆர். கமாலுதீன் (மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட ஆலிம்கள் அணி அமைப்பாளர் மௌலவி.எம். அய்யூப்கான் கிராஅத் ஓதினார்.

கே.கே. ஹாஜா (தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார்.

மௌலானா காரி. உபயதுல்லாஹ் ஹஜ்ரத் (முதல்வர் அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரி, திருச்சி) எம்.எஸ்.ஏ.ஷாஜ கான் (மாநில வக்ஃப் வாரிய விவகாரச் செயலாளர் ) அதிரை எஸ்.எஸ்.பி. நஸ்ருதீன் (தலைமை நிலைய பேச்சாளர்) மௌ லவி என். ஹாமித் பக்ரீ மன்பஈ (மாநில ஆலிம் அணி அமைப்பாளர்) கே.எம்.நிஜாமுத்தீன் (மாநில இளைஞர் அணி அமைப்பாளர்). கவிஞர். கிளியனூர் அஜீஸ். (மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர்) ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

இந்த கருத்தரங்கில் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர். கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையது சத்தார் மற்றும் மாநில, மாவட்ட அணிகளின் பொறுப்பாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியினை சிம்லா பி.ஏ. முஹம்மது நஜீப் (தஞ்சை மாவட்ட துணை செயலாளர்) தொகுத்து வழங்கினார். தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மது பாட்சா நன்றியுரையாற்றினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X