For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகின் மிகச் சிறந்த வேலை: இறுதிச் சுற்றில் 50 பேர்!

By Sridhar L
Google Oneindia Tamil News

சிட்னி: கொஞ்ச நாளைக்கு முன் உலகின் மிகச் சிறந்த வேலைவாய்ப்பு ஒன்றைப் பற்றி தட்ஸ்தமிழில் தகவல் தந்திருந்தோம். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் ஹாமில்டன் கடல் பகுதி தீவு ஒன்றை முழுமையாகப் பராமரிக்கும் வேலை. அதாவது அந்தத் தீவுக்கு கேர்டேக்கர் மாதிரி.

இந்த வேலைக்கு ஆள் தேவை என விளம்பரம் வெளியிட்ட சில மணி நேரங்களில் அந்த விளம்பரம் வந்த இணையதளமே முடங்கிப் போகும் அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்துவிட்டது நினைவிருக்கலாம்.

ஆண்டுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் சம்பளம் கொண்ட இந்த வேலைக்கு 200 நாடுகளிலிருந்து 35,000 வரையிலான விண்ணப்பங்கள் சில மணி நேரங்களில் குவிந்தன.

இப்போது அந்த வேலைக்கு 22 நாடுகளைச் சேர்ந்த 50 பேருடைய விண்ணப்பங்களை இறுதிச் சுற்றுக்கு எடுத்துக் கொண்டுள்ளனர்.

இப்போது இறுதிச் சுற்றுக்கு வந்துள்ள இந்த 50 பேரிடமும் 1 நிமிட வீடியோ அறிமுகம் ஒன்றை அவர்களையே எடுத்துத் தரச் செய்துள்ளனர். அந்த வேலையைத் தேர்வு செய்ய காரணம் மற்றும் அதற்கு எந்த வகையில் விண்ணப்பதாரர் பொருத்தமாக இருப்பார் என்பதை அவரே சுவாரஸ்யமாகச் சொல்ல வேண்டும்.

இந்த 50 பேரில் 11 பேர் மட்டும் இறுதிப் பட்டியலுக்கு செய்யப்படுவார்கள். அதிலும் 10 பேரை ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறை தேர்வு செய்யும். ஹாமில்டன் போகும் அந்த 11 வது அதிர்ஷ்டசாலி மட்டும் பொது வோட்டெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்.

தேர்வான நபர் மே முதல் வாரம் ஹாமில்டனுக்குப் பறக்கலாம்.

இந்த மாதிரி இன்டர்வியூ வைத்து வேலைக்கு ஆள் எடுப்பது ஏன் என்ற சின்ன கேள்வி மனசுக்குள் எழுகிறதல்லவா...

இந்த வேலை குறித்த அறிவிப்பு வெளியான தினத்திலிருந்து இன்றுவரை அதிகரித்துள்ள சுற்றுலா நடவடிக்கைகளின் மூலம் மட்டும் ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறைக்கு கிடைத்துள்ள வருமானம் எவ்வளவு தெரியுமா... 70 மில்லியன் டாலர்கள்!!

அதாவது 'வேலை தருகிறோம், விண்ணப்பம் போடுங்கள்' என்பதையே சற்று வித்தியாசமாகச் சிந்தித்து செயல்படுத்தியதன் விளைவு இவ்வளவு பெரிய வருமானம் கிடைத்துள்ளது. இதில் ஆண்டுக்கு 2 லட்சம் டாலர் சம்பளமெல்லாம் ச்சும்மா ஜுஜுபி!!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X