For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக: ராமநாதபுரத்தில் திருநாவுக்கரசர் போட்டி?

By Sridhar L
Google Oneindia Tamil News

Thirunavukkarasar
ராமநாதபுரம்: வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பி்ல் ராமநாதபுரம் தொகுதியிலிருந்து அக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் போட்டியிடலாம் என்று தெரிகிறது.

கடந்த பல தேர்தல்களில் அதிமு, திமுக என ஏதாவது ஒரு கட்சியின் முதுகில் சவாரி செய்து வந்த பாஜகவை இப்போது இரு கட்சிகளுமே வெட்டிவிட்டுவிட்டன. இதனால் தனித்தே போட்டியிட வேண்டியிட இக்கட்டான நிலைக்கு அந்தக் கட்சி தள்ளப்பட்டுள்ளது.

'அதிமேதாவி' பத்திரிக்கையாளர், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் மூலமாக எப்படியாவது அதிமுக கூட்டணிக்கு பாஜக முயன்றது. ஆனால், இடதுசாரிகளுக்கு உள்ளதில் 10ல் ஒரு பங்கு கூட வாக்கு வங்கி இல்லாத பாஜகவுடன் கூட்டணி சேர அதிமுக தயாராக இல்லை.

இப்படியாக அதிமுக வெட்டி விட்டதால் தேமுதிக, சரத்குமார் என வேறு பலருக்கு வலைவீசிப் பாத்த்தது பாஜக. எதுவும் கைகூடவில்லை. இதையடுத்து அதே பத்திரிக்கையாளர் மூலமாக ரஜினியை சந்தித்தார் அத்வானி. வரும் தேர்தலில் பாஜகவுக்கு 'வாய்ஸ்' தருமாறு கேட்டுப் பார்த்தது.

ஆனால், கடந்த இரு தேர்தல்களில் ரஜினி வாய்ஸ் தந்த கட்சிகளுக்கு தோல்வியே கிடைத்ததும், வாய்ஸ் தந்து வம்பி்ல் மாட்டியதையும் மறக்காத ரஜினி இம்முறை மொத்தமாக ஒதுங்கிக் கொண்டுவிட்டார்.

இதனால் தமிழகத்தில் சில தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவது நிலைக்கு பாஜக வந்துள்ளது.

அதில் கோவை, கன்னியாகுமரி, தென் சென்னை, ராமநாதபுரம், ஈரோடு ஆகிய தொகுதிகள் அடக்கம் என்கிறது அந்தக் கட்சி வட்டாரம்.

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இப்போது கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும் ராஜ்யசபா எம்பியாகவும் உள்ளார் திருநாவுக்கரசர்.

ஏற்கனவே திருநாவுக்கரசர் போட்டியிட்ட புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி இப்போது தொகுதி மறுவரையின்படி நீக்கப்பட்டு ராமநாதபுரம் தொகுயில் இணைக்கப்பட்டுவிட்டது.

இந்தத் தொகுதியில் தான் திருநாவுக்கரசருக்கு செல்வாக்கு மிக்க அறந்தாங்கி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருச்சுழி ஆகிய முக்குலத்தோர் அதிகமுள்ள சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இதனால் திருநாவுக்கரசரை ராமநாதபுரம் தொகுதியில் களமிறக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கட்சியையும் மீறி அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் பெற்றவர் திருநாவுக்கரசர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோட்டில் வக்கீல் பழனிச்சாமி போட்டி?:

அதே போல ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட வழக்கறிஞர் பழனிச்சாமி ஆர்வம் காட்டி வருகிறார். பாஜக தேசிய குழு உறுப்பினராக உள்ள இவர் இந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X