For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகம்-சாப்ட்வேர் ஏற்றுமதி சரிகிறது

By Sridhar L
Google Oneindia Tamil News

ITPL
பெங்களூர்: பொருளாதார தேக்க நிலை மற்றும் ஊழியர்கள் குறைப்பு ஆகியவை காரணமாக நடப்பு நிதியாண்டில், கர்நாடகத்தின் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி அளவு 5 சதவீதம் குறையும் என அம்மாநில தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் அசோக் குமார் மனோலி கூறியுள்ளார்.

இருப்பினும் இதன் காரணமாக பெரிய அளவில் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கை இருக்காது என மாநில அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அசோக் குமார் மனோலி கூறுகையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில் (2008-09) தகவல் தொழில்நுட்பப் பொருட்களின் ஏற்றுமதியில் ஐந்து சதவீதம் வீழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

2007-08ம் ஆண்டில் கர்நாடகத்தின் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி, ரூ. 56 ஆயிரத்து 500 கோடியாக இருந்தது. இந்த அளவுக்கு ஏற்றுமதி அதிகரிக்கக் காரணம் இன்போசிஸ், விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களே. நாட்டின் மொத்த தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியில், கர்நாடகத்தின் பங்கு மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடி கர்நாடக தகவல் தொழில்நுட்பத் துறையை வெகுவாக பாதிக்கத் தொடங்கியுள்ளது.

பிபிஓ நிறுவனங்கள்தான் பெரும் பாதிப்பை சந்திக்கத் தொடங்கியுள்ளன. பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஒன்றரை முதல் 2 லட்சம் வரையிலான பிபிஓ ஊழியர்களின் கதி குறித்தும் பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது.

மனோலி தொடர்ந்து கூறுகையில், பெரிய ஐடி நிறுவனங்கள் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதனால் ஊழியர்களுக்கு வேலைப்பளு கூடியுள்ளது. அதேசமயம், ஆளெடுப்பு போன்றவை தாமதப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X