For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரமோத் மகாஜன் மகளுக்கு பாஜக சீட் மறுப்பு

By Sridhar L
Google Oneindia Tamil News

Poonam
மும்பை: மறைந்த பாஜக இளம் தலைவர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜனுக்கு பாஜக லோக்சபா தேர்தலில் டிக்கெட் மறுத்து விட்டது. இதனால் வருத்தம் ஏதும் இல்லை என்று மகாராஷ்டிர பாஜக கூறியுள்ளது.

மறைந்த பாஜக இளம் தலைவர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன். இவர் மகாராஷ்டிர மாநில பாஜக இளைஞர் அணியின் செயாளராக இருக்கிறார். சமீபத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி புனே வந்தபோது அங்கு மிகப் பெரிய கூட்டத்தைத் திரட்டிக் காட்டி மோடியை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அந்தக் கூட்டம் நேர்த்தியாக நடந்ததற்காகவும் பாராட்டு பெற்றார்.

இந்த நிலையில், வட கிழக்கு மும்பை லோக்சபா தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார் பூனம். ஆனால் அவருக்கு பாஜக மேலிடம் சீட் தரவில்லை. மாறாக கிரித் சோமையா என்பவரை பாஜக நிறுத்தியுள்ளது.

இதனால் பிரமோத் மகாஜனின் சகோதரி பிரந்தியாவின் கணவரும், பாஜக பொதுச் செயலாளரும், முன்னாள் துணை முதல்வருமான கோபிநாத் முண்டே அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பீத் தொகுதியில் போட்டியிடவுள்ள முண்டே, தனது மைத்துனரின் மகளுக்கு எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என தீவிரமாக இருந்தார். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்து விட்டது.

ஆனால் இது ஏமாற்றத்தையோ, வருத்தத்தையோ அளிக்கவி்ல்லை என்று மகாராஷ்டிர பாஜக செய்தித் தொடர்பாளர் விஜய் கவானே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் கட்சியின் தீவிர தொண்டர்கள். பூனத்திற்கு சீட் கிடைக்காததால் எங்களுக்கு வருத்தமோ, ஏமாற்றமோ, அதிர்ச்சியோ இல்லை. மேலிட முடிவை நாங்கள் மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம் என்றார்.

ஆனால் முண்டே கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. பூனத்திற்கு சீட் மறுக்கப்பட்டது குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X