For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலைக்கு இடம் பெயர்ந்து வந்த வேணுகோபால்

By Staff
Google Oneindia Tamil News

Venugopal
திருவண்ணாமலை: திமுகவின் பழம்பெறும் எம்.பிக்களில் ஒருவர் வேணுகோபால். கடந்த முறை திருப்பத்தூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இம்முறை திருவண்ணாமலைக்கு வருகிறார்.

இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் காட்டாம்பூண்டி. பத்தாவது வகுப்பு வரை படித்துள்ளார்.

இளம் வயதிலிருந்தே தீவிர திமுககாரர். தற்போது திருவண்ணாமலை மாவட்ட திமுக அவைத் தலைவராக இருக்கிறார்.

திருப்பத்தூர் தொகுதியில் 1996 முதல் 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற சாதனைக்குரியவர்.

இவரது மகள் கலாவின் கணவர் போளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயக்குமார். இன்னொரு மகள் காமாட்சியின் கணவர் திருவண்ணாமலை ஒன்றிய முன்னாள் குழுத் தலைவர் கண்ணன்.

இதுவரை வேலூர் மாவட்டத்திலிருந்து எம்.பியாக இருந்த வேணுகோபால் முதல் முறையாக சொந்த மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்து வருகிறார்.

இம்முறை திருவண்ணாமலையில் பாமகவின் பரபரப்புத் தலைவர் காடுவெட்டி குருவை சந்திக்கிறார் வேணுகோபால்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X