For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ஆமாம்... விமானிகள் தூங்கியது உண்மைதான்!'-ஒரு பகீர்

By Staff
Google Oneindia Tamil News

Indian Airlines
மும்பை: அடுத்த முறை நீங்கள் ப்ளைட்டில் ஏறும்போதே, விமானிகள் நன்றாக ரெஸ்ட் எடுத்து பிரெஷ்ஷாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!

காரணம்...?

பணியிலிருக்கும் போதே இந்திய விமானிகள் இருவரும் கேபினில் தூங்கி விடுவது உண்மைதான் என இந்திய விமானப் போக்குவரத்து இயக்ககம் ஒரு குண்டை வீசியிருக்கிறது.

குறிப்பாக நெடுந்தூர விமானப் பயணங்களின் போது இதுபோல அடிக்கடி நடப்பதாகவும், விபத்துக்களுக்கு இதுவும் முக்கிய காரணம்தான் என்றும் ஒப்புக் கொண்டுள்ளது இந்த அரசு அமைப்பு.

கடந்த ஆண்டு ஜெப்பூர் - மும்பை மார்க்கத்தில் பறந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இப்படி தூக்கக் கலக்கத்தில்தான் இரு விமானிகளுமே தரையிறங்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டு பறந்து கொண்டே இருந்தார்களாம். சிறிது நேரத்தில் அந்த விமானம் துபாய் மார்க்கத்தில் பறந்து கொண்டிருந்ததாம்!

கோவா தரைக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் அவசரமாக அலாரத்தை ஒலிக்க விட்டு விமானிகளை எழுப்பிய பிறகுதான், பதறிக் கொண்டு விமானத்தைத் திருப்பிக் கொண்டு வந்துள்ளனர்.

இப்படி இறங்க வேண்டிய விமான நிலையத்தை விட்டுவிட்டு வேறு விமான தளத்துக்கு விமானங்கள் போவது இது முதல்முறை அல்லவாம்.

இதனால் எல்லை மீறி விமானம் பயணிப்பதாக பாதுகாப்புத் துறையினரும் பதறியடித்தபடி, விமான எதிர்ப்பு கருவிகளை உஷார்படுத்த வேண்டி வருகிறதாம்.

எனவே இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு விமான நிலைய தரைக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது இந்திய விமானப் போக்குவரத்து இயக்ககம் (Directorate General of Civil Aviation).

இதன்படி இனி ஒவ்வொரு விமானியும் நன்கு தூங்கி ரெஸ்ட் எடுத்துள்ளார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். விமானம் பறந்து கொண்டிருக்கும்போது பாதுகாப்பு அலுவலர்கள் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை விமானிகளை இன்டர்காம் மூலம் தொடர்பு கொண்டு, அவர்களது விழிப்பணர்வை சோதிக்க வேண்டுமாம். அதேபோல அறிவிப்புகள் குறித்த ஒலிபெருக்கியை சத்தமாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இரவு நேரங்களில் குறிப்பிட்ட இடத்தில் புறப்பட்டு குறிப்பிட்ட இடத்தில் இறங்க வேண்டிய வகையில் வழித்தடங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பல இடை நிறுத்தங்கள் இருந்தால், அதில் இதுபோன்ற பிரச்சினைகள் வருமாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X