For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

15 காங். வேட்பாளர்கள் அறிவிப்பு-காஞ்சிபுரம் யாருக்கு?

By Staff
Google Oneindia Tamil News

Charubala
டெல்லி: தமிழகம் மற்றும் புதுவையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 16 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

ஆனால், காஞ்சிபுரத்துக்கு வேட்பாளரை இறுதி செய்வதில் சிக்கல் நிலவுவதால் அந்தத் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

வேட்பாளர்கள் விவரம்..

1. சேலம் - கே.வி. தங்கபாலு.
2. சிவகங்கை - ப.சிதம்பரம்.
3. ஈரோடு - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
4. திண்டுக்கல் - என்.எஸ்.வி.சித்தன்.
5. கோவை - ஆர்.பிரபு.
6. திருப்பூர் - கார்வேந்தன்.
7. ஆரணி- எம். கிருஷ்ணசாமி.
8. திருச்சி - சாருபாலா தொண்டைமான்.
9. தேனி - ஜே.எம். ஆரூண்.
10. மயிலாடுதுறை - மணிசங்கர அய்யர்.
11 நெல்லை - ராமசுப்பு.
12 விருதுநகர் - சுந்தர வடிவேல்.
13 தென்காசி - வெள்ளைப்பாண்டி.
14. கடலூர் - கே.எஸ்.அழகிரி.
15.புதுச்சேரி - நாராயணசாமி.

காஞ்சிபுரத்துக்கு வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியைப் பிடிக்க ராணி, விஸ்வநாதன் ஆகிய இருவரும் போட்டா போட்டி போட்டி வருகின்றனர்.

பழையவர்கள் 8 பேருக்கும் சீட்...

மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர், இளங்கோவன் உள்பட 8 பழைய எம்பிக்களுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

5 புதுமுகங்கள்..

திருச்சி மேயராக உள்ள சாருபாலா தொண்டைமான், ராமசுப்பு, சுந்தரவடிவேலு, வெள்ளப்பாண்டி, கே.எஸ்.அழகிரி ஆகியோர் தான் புதுமுகங்களாவர்.

தனுஷ்கோடிக்கு சீட் இல்லை..

விபத்தில் கையை இழந்துவிட்ட நெல்லை தொகுதியின் இப்போதைய எம்பியான தனுஷ்கோடி ஆதித்தனுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவி்ல்லை. இவர் தனது மகளுக்காவது சீட் தருமாறு கெஞ்சிப் பார்த்தும் பலனில்லை.

இந் நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளரான நாராயணசாமிக்கு ஆதரவு தருவதாக புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் தலைவர் கண்ணன் அறிவித்துள்ளார். கண்ணனுக்கு ராஜ்யசபா சீட் வாங்கித் தருவதாக உறுதியளித்திருக்கிறதாம் நாராயணசாமி தரப்பு.

ஆரணி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் சம்பந்தியாவார். இவரது மகளைத் தான் அன்புமணி திருமணம் செய்துள்ளார்.

கடந்த முறை இளங்கோவன் போட்டியிட்ட கோபிச்செட்டிப்பாளையும் தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்டுவிட்டதால் இம்முறை ஈரோட்டில் அவர் போட்டியிடுகிறார்.

கோவையில் பிரபுவுக்கு சீட் கிடைத்துவிடக் கூடாது என்று கடுமையாக முயன்றது வாசன் தரப்பு. அதையும் மீறி இடம் பிடித்துவிட்டார் பிரபு.

'கோஷ்டி வைஸ் பிரேக்-அப்':

தமிழகத்துக்கான இப்போதைய 14 வேட்பாளர்களில் 6 பேர் தமிழக காங்கிரசின் பெரிய கோஷ்டியான வாசனின் ஆதரவாளர்கள்.

ப.சிதம்பரம் தவிர அவரது ஆதரவாளர்கள் இருவருக்கும், தங்கபாலு தவிர அவரது ஆதரவாளர்கள் இருவருக்கும் சீட் கிடைத்துள்ளது.

மீதமிருக்கும் 3 இடங்களில் இரண்டை பிரபு, கிருஷ்ணசாமி ஆகிய தனி கோஷ்டி தலைவர்கள் பிடித்துள்ளனர். அவர்களது ஆதரவாளர்கள் யாருக்கும் சீட் கிடைக்கவில்லை.

இம்முறை சித்தனுக்கு சீட் கிடைக்கவிடாமல் செய்து தனது ஆதரவாளரை நிறுத்த நினைத்தார் ப.சிதம்பரம். ஆனால், வாசன் மூலம் சித்தன் தனது சித்து வேலையைக் காட்டி தொகுதியைத் திரும்பப் பெற்றுவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X