For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக ஆதரவாளரான கோபால்சாமி ஓய்வு-காங் ஆதரவாளரான சாவ்லா பதவியேற்பு

By Staff
Google Oneindia Tamil News

Gopalsamy and Naveenchawla
டெல்லி: இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக நவீன் சாவ்லா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். சாவ்லாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய தமிழரான கோபாலசாமி இன்று இந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

நவீன் சாவ்லா பதவி உயர்வு பெற்றதையடுத்து அவர் வகித்து வந்த தேர்தல் ஆணையர் பதவிக்கு மத்திய மின்சாரத்துறைச் செயலாளர் சம்பத், நியமிக்கப்பட்டுள்ளார்.

64 வயதான சாவ்லா அடுத்த ஆண்டு ஜூன் 29ம் தேதி வரை தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பார்.

சாவ்லா காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், கோபாலசாமி பாஜக ஆதரவாளர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அவர் பாஜகவில் கூட சேரலாம் என்றும் கூட ஒரு பேச்சு உள்ளது.

மத்திய அரசுப் பணியில் நீண்ட அனுபவம் கொண்ட சாவ்லா, தேர்தல் ஆணையராகும் முன் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறைச் செயலாளராக இருந்தார். யுபிஎஸ்பி தலைவராகவும் இருந்துள்ளார்.

நாட்டில் அவசரகால நிலை அமலில் இருந்தபோது டெல்லி ஆளுநரின் செயலாளராகவும் இருந்தவர். ஏராளமான புத்தகங்கள் எழுதியுள்ள சாவ்லா அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.

இந்திய-இத்தாலிய நாடுகளின் உறவை மேம்படுத்த உதவியதற்காக இத்தாலி நாட்டின் மாசினி விருதையும் வென்றுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X