For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக வேட்பாளர்கள் சிலர் கோடீஸ்வரர்கள்..

By Staff
Google Oneindia Tamil News

Annamalai and Muhammad Ali Jinnah
சென்னை: அதிமுக வேட்பாளர்கள் சிலர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

நேற்று அதிமுக கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் மொத்தமாக மனு தாக்கல் செய்தனர். வைகோ மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் மட்டும் மனு தாக்கல் செய்யவில்லை. மற்ற 38 பேரும் தாக்கல் செய்து விட்டனர்.

தங்களது வேட்பு மனுக்களுடன் அவர்கள் சொத்து குறித்த விவரத்தையும் இணைத்துள்ளனர். அதிமுக வேட்பாளர்களில் பலர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதுகுறித்த ஒரு பார்வை..

முகம்மது அலி ஜின்னா (அதிமுக-மத்திய சென்னை):

இவரது சொத்து மதிப்பு ரூ. 5.7 கோடியாகும். ரொக்கமாக ரூ. 3.70 லட்சம், வங்கி முதலீடுகள் உள்ளிட்ட பிற நிதி கணக்கு ரூ. 31.77 லட்சம்.

ரூ. 2.88 லட்சம் மதிப்பிலான மோட்டார் வாகனங்கள் உள்ளன. ரூ. 10.6 லட்சம் மதிப்பிலான நகைகள் உள்ளன. பிற சொத்துக்களின் மதிப்பு ரூ. 3.70 லட்சம். ரூ. 3 லட்சம் மதிப்பிலான விவசாய நிலம்,
ரூ. 1.6 கோடி மதிப்பிலான விவசாயம் அல்லாத நிலம், ரூ. 3.35 கோடி மதிப்பிலான வர்த்தக மற்றும் குடியிருப்புக் கட்டடம், ரூ. 20 லட்சம் மதிப்பிலான வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள். மொத்த சொத்து- ரூ. 5.7 கோடி.

சிட்லபாக்கம் ராஜேந்திரன் (அதிமுக - தென் சென்னை):

ரொக்கம் - ரூ.1.03 லட்சம், பிற நிதி இருப்பு மற்றும் வங்கி முதலீடுகள் - ரூ. 27.27 லட்சம், நகைகள் ரூ. 14 லட்சம், அசையா சொத்துக்கள், ரூ. 27.49 லட்சம் மதிப்பிலான விவசாய நிலம், ரூ. 80.22 லட்சம் மதிப்பிலான விவசாயமற்ற நிலம், ரூ. 1.26 கோடி மதிப்பிலான வர்த்தக மற்றும் குடியிருப்புக் கட்டடம், ரூ. 13.78 லட்சம் மதிப்பலான வீடு.
மொத்த சொத்து மதிப்பு - ரூ. 2.9 கோடி.

அண்ணாமலை (அதிமுக - நெல்லை):

இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 10 கோடியே 18 லட்சமாகும்.

இந்த அசையும், அசையா சொத்து தனது பெயரிலும், மனைவி பானுமதி, மகன் கிருஷ்ணராஜா பெயரிலும் இருப்பதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலையிடம் ரூ.2 லட்சமும், அவரது மனைவி மற்றும் மகனிடம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரமும், ரொக்கமாக உள்ளது.

பங்கு சந்தை முதலீடு ரூ.4லட்சத்து 50 ஆயிரமும், மனைவி, மகனிடம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரமும் உள்ளது. 13 லட்சம் மதிப்பில் 3 கார்களும், 2 ஆட்டோக்களும் உள்ளன. மகனுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் ஒரு இரு சக்கர வானமும், இருக்கிறது.

ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நகைகளும், மனைவி மற்றும் மகனிடம் ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான நகைகளும் உள்ளன. அவரது பெயரில் ரூ.9 லட்சத்து 25 ஆயிரமும், மகன் பெயரில் ரூ.49 லட்சத்து 25ஆயிரமும் தொழில் பங்கீடு உள்ளது.

அண்ணாமலை பெயரில் ரூ.22 லட்சத்து 50 ஆயிரத்து 400ம், மனைவி பெயரில் ரூ.2 லட்சத்து மதிப்பிலான விவசாய நிலங்கள் உள்ளன. தொடர்ந்து அண்ணாமலை பெயரில் ரூ.2 கோடியோ 54 லட்சமும், மனைவி மற்றும் மகன் பெயரில் ரூ.3 கோடியோ 45 லட்சம் மதிப்பிலான விவசாய நிலங்கள் உள்ளன.

அண்ணாமலை பெயரில் ரூ.2 கோடியே 90 லட்சத்து 50 ஆயிரமும், மனைவி பெயரி்ல் ரூ.22 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களும் உள்ளன.

மொத்தத்தில் அண்ணாமலை மற்றும் அவரது மனைவி பானுமதி, அவரது மகன் கிருஷ்ணராஜா ஆகியோர் பெயரில் ரூ.10 கோடியே 18 லட்சத்து 30 ஆயிரத்து 400 மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன.

சென்னையில் உள்ள வங்கியில் அண்ணாமலைக்கு ரூ.50 லட்சம் கடன் உள்ளது.

சிந்தியா பாண்டியன் சொத்து ரூ. 69.8 லட்சம்

தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிந்தியா பாண்டியன் தனக்கு ரூ. 69.8 லட்சத்துக்கு சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் சிந்தியா பாண்டியன் நேற்று தனது வேட்பு மனுவுடன் சொத்து விபரங்களை தெரிவித்தார். அதில் அவரது பெயரி்ல் வங்கியில் டெபசிட்டாக ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 340ம், 80 பவுண் நகைகள் 4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும் உள்ளன.

மதுரையில் 7 லட்சம் மதிப்பில் 5 பிளாட்டுகளூம், மகிந்திரா ரிசாட்டில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 731 மதிப்பிலான பங்குகளும் உள்ளன.

நாங்குநேரி, விருதுநகர், பல்லவாரம், அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரூ.41 லட்சத்து 58 ஆயிரத்து 269 மதிப்பிலான விவசாய நிலங்கள் உள்ளன. சென்னை அண்ணாநகரில் ரூ.9 லட்சத்து 85 ஆயிரத்து 182 மதிப்பிலான 2 வீடுகளும் உள்ளன.

மேலும் கையிருப்பு பணம் ரூ.15 ஆயிரத்து 450ம் சேர்த்து மொத்தம் ரூ.69 லட்சத்து 77 ஆயிரத்து 972 மதிப்பிலான சொத்துகள் இருப்பது தெரிய வந்தது.

அவரது கணவர் பிஎச் பாண்டியன் பெயரில் வங்கியில் ரூ.8 லட்சத்து 90 ஆயிரமும், வங்கி பத்திரங்கள் மற்றும் பங்குகளாக 1 லட்சத்து 68 ஆயிரமும், 2 லட்சத்து 33 ஆயிரத்து 230 மதிப்பில் ஒரு லேன்சர் காரும், ரூ.23 ஆயிரத்து 516 மதிப்பில் ஒரு மாருதி ஜிப்சியும் உள்ளது. ரூ..4 ஆயிரத்து 265 மதிப்பில் ஒரு கண்டசா காரும், உள்ளது.

ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 40 சவரன் தங்க நகைகளும், தூத்துக்குடியில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நிலமும், அம்பை பகுதியில் ரூ.8 லட்சத்து 29 ஆயிரத்து 569 மதிப்பில் விவசாய நிலங்களும், ரூ.6 ஆயிரத்து 356 கையிருப்பு பணமும் உள்பட ரூ.33 லட்சத்து 60 ஆயிரத்து 15 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
லிங்கம் (சிபிஐ - தென்காசி):

தென்காசி தனி தொகுதி சிபிஐ வேட்பாளர் லிங்கத்தின் சொத்து விவரம்..

ராஜபாளையம் அருகில் உள்ள முத்துசாமியாபுரம் காமராஜர் நகரில் அரசு இலவசமாக வழங்கிய 1 செண்ட் நிலத்தில் ரூ.85 ஆயிரம் மதிப்பலான ஒரு வீடும், ரொக்கம் ரூ. 5 ஆயிரமும், இரண்டு வங்கி கணக்கில் ரூ.1,506ம் மனைவி சுந்தரம்மாள் பெயரில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான நகைக்கடனும், அவரது கையில் ரூ.1,500ம், வங்கியில் ரூ.23 ஆயிரத்துக்கு நகைக்கடன் இருப்பதாகவும் சொத்து விபரத்தில் தெரிவித்துள்ளார்.

வேணுகோபால் (அதிமுக - திருவள்ளூர்):

ரொக்கம் - ரூ. 94,000, ரூ. 5.2 லட்சம் மதிப்பிலான நகைகள்,
வாகனங்கள் ரூ. 45,000, சேமிப்பு கணக்கில் - ரூ. 5 லட்சம்.

நிலங்கள் - ரூ. 3.75 லட்சம், பிற - ரூ. 10.05 லட்சம், மொத்த சொத்து மதிப்பு - ரூ. 25.39 லட்சம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X