For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே முதல் வாரம் மன்மோகன், சோனியா, ராகுல் தமிழகம் வருகை

By Staff
Google Oneindia Tamil News

Sonia Gandhi, Manmohan Singh and Rahul Gandhi
சென்னை: தமிழகத்தில் பிரசாரம் செய்வதற்காக மே முதல் வாரம் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் வருகின்றனர்.

சென்னையில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், கட்சியின் தேர்தல் அறிக்கையின் தமிழாக்கம் வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர் வயலார் ரவி இதை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் தமிழகத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேச பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வருகின்றனர்.

மே முதல் வாரம் இவர்கள் வருகின்றனர். அவர்கள் வரும் தேதி, பிரசாரத் திட்டம் பின்னர் வெளியிடப்படும் என்றார்.

தமிழகத்தில் பரதன் பிரசாரம்

அதேபோல அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதன் தமிழகம் வருகிறார்.

அவருடன் தேசிய செயலாளர் டி.ராஜா, துணை பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோரும் பிரசாரம் செய்ய வருகின்றனர்.

பிரசார விவரம்..

ஏ.பி.பரதன்

மே 6 -தென்காசி, 7- நாகப்பட்டினம், 8 - சென்னை.

ராஜா

புதுச்சேரி - 26, கடலூர் - 27, சென்னை - 29,
வட சென்னை - மே 1, நாகர்கோவில் - 2, தென்காசி, விருதுநகர் - 3, மதுரை, சிவகங்கை -4, திருப்பூர் - 5, கோவை - 6, தர்மபுரி - 7, திருச்சி - 8, நாகை 9, 10, வட சென்னை - 11.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X