For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொளுத்தும் வெயில்: நாக்பூர்-117, டெல்லி-110 டிகிரி

By Staff
Google Oneindia Tamil News

நாக்பூர்: வட இந்தியாவை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று நாக்பூரில் 117 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் 110 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்தியா முழுமையும் தற்போது கோடை வெயில் கொளுந்துவிட்டு எரிகிறது. ராஜஸ்தானில் பாலைவன பகுதிகளில் இருந்து வெப்ப காற்று கிழக்கு நோக்கி வேகமாக வீசி வருவதால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வெயில் கொடுமை மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில் உள்ள நாக்பூர் நகரத்தில் 117 டிகிரி பாரன்ஹீட் (47.1 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது. இது அப்பகுதியில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் இருக்கும் வெயிலை விட 10 டிகிரி பாரன்ஹீட் அதிகமாகும்.

நாக்பூர் பகுதியில் சுமார் 67 ஆண்டுகளுக்கு பின் 117 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. வார்தா நகரில் 115 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவி வருகிறது.

இது குறித்து நாக்பூரை சேர்ந்த மாணவர் புஷ்கர் என்பவர் கூறுகையில், எனக்கு நேற்று தேர்வு 12.30 மணிக்கு முடிந்தது. பைக்கில் வீட்டுக்கு போவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. பைக்கின் உலோக பகுதிகளை தொட்டபோது என் கைகள் புண்ணாகிவிட்டது என்றார்.

தலைநகர் டெல்லியில் இருந்தவர்களும் இந்த பிரச்சினையால் அதிகம் அவதிப்பட்டனர். டெல்லியில் நேற்று 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

இது குறித்து இந்திய வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், மழை வருவதற்கான அறிகுறி எதுவும் இல்லை. இன்றும் டெல்லியில் வெயில் குறையாது. வட இந்தியாவில் வழக்கத்தை விட 10 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு அதிக வெப்பம் இருக்கிறது என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X