For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைமைத் தேர்தல் ஆணையரின் பெயர் வாக்காளர் பட்டியலில் 'மிஸ்ஸிங்'!

By Staff
Google Oneindia Tamil News

Naveen Chawla
டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. முகவரி மாற்றக் குழப்பத்தால் பெயர் விடுபட்டு விட்டது. இருப்பினும் தனது மனைவி, மகளுடன் நவீன் சாவ்லா வாக்களித்து விட்டுச் சென்றார்.

இன்று காலை டெல்லி நிர்மல் பவனில் உள்ள வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க நவீன் சாவ்லா, அவரது மனைவி, மகள் ஆகியோர் வந்தனர்.

86வது வாக்குச் சாவடியில் அவர்கள் வாக்களித்தனர். ஆனால் வாக்களிப்பதற்கு முன்பு அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று தெரிய வந்தது. இருப்பினும் இன்னொரு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருந்தது.

தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி உயர்வு பெற்று வேறு முகவரிக்கு சாவ்லா வந்ததால் 86வது வாக்குச் சாவடிக்கான வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறாமல் போய் விட்டது.

இருப்பினும் நவீன் சாவ்லா தனது மனைவி, மகளுடன் வாக்களித்து விட்டுச் சென்றார்.

நவீன் சாவ்லாவின் பெயர் பட்டியலில் இல்லாததால் சிறிது நேரம் குழப்பம் நிலவியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X