For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'சீன ஆயுதங்களால வென்றது இலங்கை'-டைம்ஸ்

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்: இலங்கை போரில் விடுதலை புலிகளை அடக்கி ஒடுக்க இலங்கை அரசுக்கு சீனா ஆயுதங்கள் வழங்கி உள்ளதாகவும், இதன்மூலம் இலங்கை போரை வென்றுள்ளது எனவும் 'த டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தி:

விடுதலைப் புலிகளை முழுவதுமாக தோற்கடிக்கும் நேரத்தை எட்டியிருப்பதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.இலங்கை இந்த போரில் வெற்றி பெற சீனா வழங்கிய ஆயுதங்களே காரணம் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

சீனா தனது ஆயுதங்களை நட்பு நாடுகளுக்கும், வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளுக்கும் தொடர்ச்சியாக வழங்கி வருவது மேற்கத்திய நாடுகளின் கவனத்தை மட்டும் ஈர்க்கவில்லை. மாறாக பல ஆசிய நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இலங்கையில் உள் நாட்டு போர் நடந்து வருவதால் 1990களில் இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதை குறைத்தன. இதையடுத்து சீனா, இலங்கைக்கு ஆயுதம் விற்கும் முக்கிய நாடாக மாறியது.

இலங்கையி்ல் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கைக்கான உதவிகளை அமெரிக்கா நிறுத்தியபோது கடந்த 2007ல் சீனா இலங்கைக்கான ஆயுத உதவிகளை பல மடங்கு கூட்டியது. இலங்கைக்கு ஆறு எப்-7 போர் விமானங்களை இலவசமாக கொடுத்தது.

உலகின் மொத்த ஆயுத விற்பனையில் அமெரிக்கா 40 சதவீதத்தையும், இங்கிலாந்து 8 சதவீதத்தையும், சீனா 4 சதவீதத்தையும் கொண்டுள்ளன.

இலங்கையில் இருக்கும் சிறிய கடற்கரை கிராமங்களை சீனாவின் நிறுவனங்கள் பெரிய துறைமுகமாக வளர்த்து வருகின்றனர். அம்பாந்தோட்டையில் கோடிக்கணக்கில் செலவழித்து உருவாக்கப்படும் இந்த துறைமுகம் சீனாவின் கடற்படை கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் மையங்களாக செயல்படலாம்.

சீனாவின் தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிபொருட்கள் இந்த பாதையினால் தான் கொண்டுவரப்படுகிறது. அதற்கு பாதுகாப்பாக சீனாவின் கடற்படை செயல்பட்டு வருகின்றது. இந்த கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் துறைமுகமாக அம்பாந்தோட்டை வருங்காலத்தில் இயங்கும். அது சீனாவின் கடற்படை தளமாக மாறும்.

சிலர் அவ்வாறு இருக்காது என எண்ணலாம். ஆனால், அதுதான் உண்மை, சீனா ராணுவ அதிகாரிகள் தொலைநோக்கு பார்வை உடையவர்கள். தைவானுடன் மோதல் ஏற்படும் சமயத்தில் அது சீனாவின் கடற்பாதைகளில் தடையை ஏற்படுத்தலாம் என சீனா கருதுகிறது. இதை மனதில் வைத்து கொண்டு அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற சமயங்களில் சீனாவுக்கு தொலைவில் இருக்கும் இடங்களில் நண்பர்கள் தேவை. எனவேதான் இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் அது நட்பு ஏற்படுத்தி வருகின்றது. பாகிஸ்தானில் ஹெடார் துறைமுகத்தையும் சீனா நிர்மாணித்துள்ளது என த டைம்ஸ் கூறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X