For Daily Alerts
Just In
கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் கருணாநிதி இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் கருணாநிதிக்கு கடும் முதுகு வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் உடல் நலம் தேறி வீடு திரும்பினார்.
ஆனால் லோக்சபா தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மீண்டும் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் டெல்லியிலிருந்து இன்று சென்னை திரும்பிய அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Comments
அரசியல் karunanidhi தமிழ்நாடு கருணாநிதி hospitalised tamilnadu உடல் நலக்குறைவு மருத்துவமனையில் அனுமதி
Story first published: Friday, May 22, 2009, 19:06 [IST]