For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன்மோகன் புதிய அணியில் 6 மாஜி முதல்வர்கள்

By Staff
Google Oneindia Tamil News

Manmohan Singh
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான புதிய அமைச்சரவையில் கர்நாடகத்தைச் சேர்ந்த வீரப்ப மொய்லி, எஸ்.எம். கிருஷ்ணா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுஷில் குமார் ஷிண்டே, சரத் பவார், காஷ்மீரைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத், கேரளத்தைச் சேர்ந்த ஏ.கே. ஆண்டனி ஆகிய முதல்வர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

8 பேர் ராஜ்யசபா உறுப்பினர்கள் ..

மத்திய கேபினட் அமைச்சர்களில் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, எஸ்.எம்.கிருஷ்ணா, குலாம் நபி ஆசாத், வயலார் ரவி, முரளி தியோரா, அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினர்கள் ஆவர். மற்ற 12 பேரும் லோக்சபா உறுப்பினர்கள் ஆவர்.

அமைச்சர்களில் மூத்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா:

மன்மோகன் சிங் அமைச்சர்களிலேயே மூத்தவர் எஸ்.எம்.கிருஷ்ணாதான். அவரது வயது 77. மிகவும் இளையவர் மமதா பானர்ஜி. அவருக்கு வயது 54.

10 கோடீஸ்வரர்கள் - 2 லட்சாதிபதிகள்:

ராஜ்யசபா உறுப்பினர்கள் தவிர்த்த லோக்சபா உறுப்பினர்கள் 12 பேரில் 2 பேர் மட்டுமே லட்சாதிபதிகள்.

அவர்கள் - ஜெய்பால் ரெட்டி (ரூ.20.42 லட்சம்), மம்தா பானர்ஜி (ரூ.4.73 லட்சம்).

மற்ற 10 பேரும் கோடீஸ்வரர்கள்.

அவர்களில் பெரும் கோடீஸ்வரர் கபில் சிபல் (இவரது சொத்து மதிப்பு ரூ. 31.4 கோடி). சிறிய கோடீஸ்வரர் ஹண்டிக் (இவரது சொத்து மதிப்பு ரூ. 1.5 கோடி).

மற்றவர்களின் சொத்து விவரம் -

கமல்நாத் (ரூ.14.17 கோடி), மீரா குமார் (ரூ.10 கோடி), ப.சிதம்பரம் (ரூ.10 கோடிக்கு மேல்), சரத் பவார் (ரூ.8.73 கோடி), சுஷில் குமார் ஷிண்டே (ரூ.8.6 கோடி), பிரணாப் முகர்ஜி (ரூ.2.83 கோடி), வீரப்ப மொய்லி (ரூ.2.39 கோடி), சி.பி.ஜோஷி (ரூ.1.95 கோடி), ஹண்டிக் (ரூ.1.5 கோடி).

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X