For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா-மம்தாவுக்கு ரயில்வே

By Staff
Google Oneindia Tamil News

Mamata Banerjee and SM Krishna
டெல்லி: நேற்று தன்னுடன் பதவியேற்ற 19 அமைச்சர்களில் 6 பேருக்கு துறைகளை ஒதுக்கியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜியும், உள்துறை அமைச்சராக ப.சிதம்பரமும், ரயில்வே அமைச்சராக மம்தா பானர்ஜியும், வெளியுறவுத்துறை அமைச்சராக எஸ்.எம்.கிருஷ்ணாவும், பாதுகாப்பு அமைச்சராக ஏ.கே.ஆண்டனியும், உணவுத்துறை அமைச்சராக சரத் பவாரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதி்ல் ரயில்வே, வெளியுறவுத்துறை தவிர மற்ற துறைகள் கடந்த அமைச்சரவையி்ல் யாரிடம் இருந்தனவோ அவர்களிடமே தரப்பட்டுள்ளன.

மற்ற அமைச்சர்களுக்கான துறைகளும் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

மம்தாவுக்கு ரயில்வே துறை ஒதுக்கப்பட்டுவிட்டதன் மூலம் திமுகவுக்கு ரயில்வே துறை கேபினட் பதவி இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X