For Quick Alerts
For Daily Alerts
Just In
விழுந்து நொறுங்கிய 'மிக் 21'-விமானி தப்பினார்

இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே லுனி கிராமத்துக்கு அருகில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்து குறித்து ஜோத்பூர் எஸ்பி கவிராஜ் கூறுகையில், விபத்தால் தரையில் எந்த சேதமும் ஏற்படவில்லை. விபத்து ஏற்பட போவதை உணர்ந்த விமானி அதிலிருந்து பாராசூட் மூலம் குதித்து தப்பிவி்ட்டார் என்றார்.
இது கடந்த ஒரு மாத காலத்தில் இந்திய விமான படை சந்திக்கும் மூன்றாவது விபத்தாகும். கடந்த ஏப்ரல் 30ம் தேதி சுகோய்-30 விமானம் நொறுங்கி விழுந்தது. அடுத்ததாக மே 15ம் தேதி மிக் 27 போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.