For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம்-புதுவைக்கே அதிக அமைச்சர்கள்!

By Staff
Google Oneindia Tamil News

Dayanidhi Maran,Vasan,Raja and Alagiri
டெல்லி: மத்திய அமைச்சரவையில் தமிழகத்துக்கு 9 அமைச்சர்களும் புதுச்சேரிக்கு 1 அமைச்சர் என மொத்தம் 10 இடங்கள் கிடைத்துள்ளன.

மத்திய அமைச்சரவையில் பிரதமர் உள்பட மொத்தம் 79 பேர் இடம் பெறவுள்ளனர். ஏற்கனவே பிரதமர் உள்பட 20 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றுவிட்டனர்.

இன்று 14 கேபினட் அமைச்சர்களும் 7 தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களும் 38 இணையமைச்சர்கள் என மொத்தம் 59 பேர் பங்கேற்கவுள்ளனர்.

இதன்மூலம் கேபினட் அந்தஸ்து கொண்ட 33 அமைச்சர்களில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர். இதில் தயாநிதி, அழகிரி, ராசா ஆகியோர் திமுகவையும் ப.சிதம்பரம், வாசன் ஆகியோர் காங்கிரஸையும் சேர்ந்தவர்கள்.

இணையமைச்சர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பழனிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், காந்தி செல்வன், நெப்போலியன் என திமுகவைச் சேர்ந்த 4 பேரும், புதுச்சேரியின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாராயணசாமி என 5 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.

தமிழகத்துக்கு இணையாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 9 பேருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. இதில் காங்கிரசைச் சேர்ந்த 6 பேரும் சரத் பவாரின் கட்சியினர் 3 பேரும் அடங்குவர்.

அடுத்தபடியாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 8 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. இதில் 2 பேர் கேபினட், 6 பேர் இணையமைச்சர்கள். இந்த 8 பேரில் 7 பேர் மம்தா பானர்ஜியின் கட்சியினர். காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜிக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து அதிக அமைச்சர்களைப் பெறும் மாநிலம் கேரளம் ஆகும். இங்கு 6 பேருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இதி்ல் 5 பேர் காங்கிரசையும் ஒருவர் முஸ்லீம் லீக்கையும் சேர்ந்தவர். கேரளாவில் வரலாற்றிலேயே இத்தனை மத்திய அமைச்சர்கள் அந்த மாநிலத்துக்கு கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.

அதே நேரத்தில் நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்துக்கு ஒரு கேபினட் அமைச்சர் கூட இல்லை. அந்த மாநிலத்தைச் சேர்ந்த 5 பேருக்கு இணையமைச்சர் பதவி தான் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவுக்கு ஒரு கேபினட் அமைச்சர் பதவி, 5 இணையமைச்சர்கள் என 6 பதவிகளும், கர்நாடகத்துக்கு 3 கேபினட், ஒரு இணையமைச்சர் என 4 அமைச்சர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

காஷ்மீ்ர், பஞ்சாப், ஹிமாச்சல், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றுக்கு தலா இரு அமைச்சர பதவிகளும், பிகார், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, அஸ்ஸாம், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு தலா ஒரே ஒரு அமைச்சர் பதவிகளும் தரப்பட்டுள்ள.

கேபினட் அமைச்சர்கள்:

மொத்தம்-33
காங்கிரஸ்-27
திமுக-3
திரிணமூல் காங்கிரஸ்-1
தேசியவாத காங்கிரஸ்-1
தேசிய மாநாட்டுக் கட்சி-1

இணையமைச்சர்கள் (தனிப்பொறுப்பு):

மொத்தம்-7
காங்கிரஸ்-6
தேசியவாத காங்கிரஸ்-1

இணையமைச்சர்கள்:

மொத்தம்-38
காங்கிரஸ்-26
திரிணமூல் காங்கிரஸ்-6
திமுக-4
தேசியவாத காங்கிரஸ்-1
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (கேரளா)-1

இதுவரை 6 பேருக்கு மட்டுமே துறைகள் ஒதுக்கப்பட்டன. இந் நிலையில் இன்று பதவியேற்கும் அமைச்சர்கள் உள்பட அனைவருக்கும் இன்றோ அல்லது நாளையோ துறைகள் ஒதுக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.

திமுகவுக்கு 7 மட்டுமே..

கடந்த மன்மோகன் அமைச்சரவையில் திமுகவுக்கு மொத்தம் 8 அமைச்சர்கள் இருந்தனர். இந்த முறை ஒரு அமைச்சர் பதவி குறைந்து விட்டது.

அதேபோல தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த முறை 4 பேர் அமைச்சர்களாக இருந்தனர். இவர்களில் ப.சிதம்பரம், மணி சங்கர அய்யர் ஆகியோர் கேபினட் அமைச்சராகளாக இருந்தனர். இவர்கள் தவிர வாசன், இளங்கோவன் ஆகியோர் இணை அமைச்சர்களாக இருந்தனர். ஆனால் தற்போது 2 பேர் மட்டுமே பதவி பெற்றுள்ளனர்.

பாமக சார்பில் 2 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். இந்தமுறை அந்தக் கட்சிக்கு ஒரு எம்பி கூட தேறவில்லை.

மொத்தத்தில் தமிழகத்தின் சார்பில் கடந்த அமைச்சரவையில், 14 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். ஆனால் இந்த முறை வெறும் 9 பேர் மட்டுமே மத்திய அமைச்சர்களாகியுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இம்முறை தமிழகத்துக்கும் மகாராஷ்டிரத்துக்கும் தான் அதிகமான அமைச்சர்கள் கிடைத்துள்ளனர்.

9 பெண்கள்.. 5 தலித்கள்.. 5 முஸ்லீம்கள்:

மன்மோகன் சிங்கின் மத்திய அமைச்சரவையில் 9 பெண்கள், 5 தலித்கள், 5 முஸ்லீம்களுக்கும் இடம் தரப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X