For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடைசி கட்ட போரில் 20000 தமிழர்கள் படுகொலை

By Staff
Google Oneindia Tamil News

Tamils killed in final phase of war
நியூயார்க்: இலங்கையின் வட பகுதியில் கடைசி கட்டமாக நடந்த போரின்போது கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் கண்மூடித்தனமாக படுகொலை செய்திருப்பதாக டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளதாக 'தமிழ் வின்' இணையதளம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த செய்தி கூறுவதாவது..

இலங்கை இராணுவத்தின் இறுதிக்கட்ட யுத்தத்தில் 20,000 தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்திருப்பதாக டைம்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. ராணுவம் நடத்திய எறிகணை வீச்சுக்களால் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அறிவிக்கப்பட்டதை விட, மூன்று மடங்கு அதிகம்.

மோதல் தவிர்ப்பு வலயத்தில் லட்சக்கணக்கான பொது மக்கள் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 27ம் தேதி கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்துவதாக இலங்கை அரசு அறிவித்தது.

அத்துடன், அங்கு இடம்பெற்ற பொது மக்களின் உயிரிழப்புகளை, விடுதலைப்புலிகளின் மீது அரசாங்கம் சுமத்தியதாக டைம்ஸ் கூறுகிறது.

ஆனால், கிடைத்துள்ள புகைப்படங்கள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள், சாட்சியங்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்கள் வேறு மாதிரியான தகவல்களைத் தருகின்றன.

சர்வதேச கண்காணிப்பாளர்களும், உதவிப் பணியாளர்களும், பத்திரிக்கையாளர்களும் புறக்கணிக்கப்பட்டு, ராணுவம் இறுதி மூன்று வாரங்கள் பெரும் தாக்குதல்களை முன்னெடுத்து யுத்தம் நிறைவடைந்து விட்டதாக அறிவித்தது.

ஆனால் அதற்கான விலைகளை அப்பாவி தமிழ் பொது மக்களே செலுத்த வேண்டியதானது.

பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர், மே 19ம் தேதி மட்டும் 1000 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த பாதிப்புகள் தற்போது கிடைத்துள்ள புகைப்படங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X