For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒபாமா விஷம் விதைக்கிறார்-வீடியோவில் ஒசாமா

By Staff
Google Oneindia Tamil News

Osama Bin Laden
தோகா: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்லாமியர்கள் மத்தியில் விஷ விதைகளை விதைத்து வருகிறார் என்று அல்-கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் தேடப்பட்டு வரும் ஒசாமாவின் பேச்சு அடங்கிய புதிய வீடியோவை தோஹாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அல் ஜசீரா டிவி ஒளிபரப்பியது.

அதில் பேசும் ஒசாமா சவுதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஒசாமா கூறுகையி்ல்,

ஒபாமா தனக்கு முன்பு ஆட்சி செய்த ஜார்ஜ் புஷ்ஷின் அதே கொள்கைகளைத் தான் பின்பற்றி வருகிறார். அவர் முஸ்லீம் உலகில், விஷ விதைகளை விதைத்து வருகிறார். அதனால் தான் தாலிபான்களுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான் அரசுக்கு உதவி வருகிறார் என்று கூறியுள்ளார்.

ஒசாமாவின் இந்தப் பேட்டி கடந்த இரண்டு நாட்களில் அல்-கொய்தா வெளியிடும் இரண்டாவது வீடியோவாகும். நேற்று முன் தினம் விடீயோவாக வெளி வந்த ஒசாமாவின் தளபதி அய்மான் அல் ஜவகிரியின் பேட்டியில், கெய்ரோ வரும் ஒபாமாவை எகிப்து மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறுகையில், ஒபாமா முஸ்லிம் மக்களுடன் நெருக்கமாக, வெளிப்படையாக பேசி, பழகி வருகிறார். ஒபாமாவின் சாதனைகளில் இருந்து மக்களின் மனதை திசை திருப்பவே இந்த வீடியோ வெளியாகியுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X