For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனில் அம்பானிக்கு 'குளோபல் லீடர்ஷிப்' விருது!

By Staff
Google Oneindia Tamil News

Anil Ambani
வாஷிங்டன்: இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களான ரிலையன்ஸ் அனில் அம்பானி, விப்ரோ அஜீம் பிரேம்ஜி ஆகியோரை அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் (US India Business Council-USIBC) கவுரவிக்கிறது.

வரும் ஜூன் 17-ம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடக்கும் இந்த கவுன்சிலின் 34-வது ஆண்டு கூட்டத்தில் அனில் அம்பானிக்கு 'குளோபல் லீடர்ஷிப்' விருதும், விப்ரோ ப்ரேம்ஜிக்கு 'குளோபல் விஷன்' விருதும் வழங்கப்படும்.

நியூயார்க் லைப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷனின் முன்னாள் சேர்மன் ஸ்டெர்ன்பர்க்குக்கு 'பிஸினஸ் எக்ஸலன்ஸ் விருது' வழங்கப்படுகிறது.

தொழில் துறையில் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்ததற்காக இந்த இருவருக்கும் இந்த கவுரவம் அளிக்கப்படுகிறது.

இந்திய- அமெரிக்க தொழில் துறையில் மிக முக்கிய கவுரவமாக இந்த விருது பார்க்கப்படுகிறது. இந்த 34வது ஆண்டுக் கூட்டத்தில் 310 நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X