For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'Jaxtr இணையத் தளத்தை வாங்கியது சப்ஸேபோலோ

By Staff
Google Oneindia Tamil News

கலிபோர்னியா: சப்ஸே டெக்னாலஜிஸ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள Jaxtr நிறுவனம் தொடர்ந்து அதன் தனித்துவத்துடன் அதே பெயரில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் Jaxtr -ன் பணிகள் மற்றும் விரிவாக்கம் போன்றவற்றை சப்ஸே நிறுவனமே மேற்கொள்ளும்.

சப்ஸே டெக்னாலஜிஸ் நடத்தும் நிறுவனம்தான் சப்ஸேபோலா.காம். சபீர் பாட்டியா மற்றும் யோகேஷ் பட்டேல் ஆகியோர் இதன் இணை நிறுவனர்களாக உள்ளனர்.

இந்த நிறுவனம் சமீபத்தில்தான் Jaxtr எனும் இணையதள டெலிபோன் சர்வீஸ் நிறுவனத்தை வாங்கியது. Jaxtr இணையதளம் கலிபோர்னியாவிலிருந்து இயங்குகிறது. இதனைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் இலவசமாக கம்ப்யூட்டர் வழியாகப் போன் பேசலாம். சமீபத்தில் Cafe Jaxtr எனும் புதிய தொழில் நுட்பத்தை இந்த இணைய தளம் அறிமுகப்படுத்தியது. இதன்படி, நபர்கள் ஆன்லைனில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுடன் பேசிக் கொள்ள முடியும். இதற்குமுன் ஆன்லைனில் இருந்தால் மட்டுமே போன் பேச முடியும்.

இதன் மூலம் உலகம் முழுக்க 10 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட வலுவான நிறுவனமாகத் திகழ்கிறது Jaxtr. இதன் முதலீட்டாளர்களில் மூவர் ஸ்கைப் நிறுவனத்திலும் முதலீட்டாளர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சப்ஸே டெக்னாலஜிஸ் நிறுவனமும் கலிபோர்னியாவிலிருந்துதான் இயங்குகிறது. ஏர்டெல், டாடா, செல்காம் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு சப்ஸே நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை வழங்கிவருகிறது. Jaxtr நிறுவனத்தை சமீபத்தில் கையகப்படுத்திய சப்ஸே, இப்போது Jaxtr -ன் பெயரை மாற்றாமல் அப்படியே இயக்க முடிவு செய்துள்ளது. அதே நேரம் அதன் பணிகள் மற்றும் விரிவாக்க வேலைகளை சப்ஸே நிறுவனமே மேற்கொள்ளும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X