For Quick Alerts
For Daily Alerts
Just In
திமுக எம்பி ரித்தீஷ் மிரட்டுகிறார்-டிஜிபியிடம் புகார்
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வெளி வரும் ஒரு வார இதழ் ராமநாதபுரம் தொகுதி திமுக எம்பி ரித்தீஷ் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து நடிகரும், திமுக எம்பியுமான ரித்தீஷ், அவரது உறவினர்கள் சிலர் அந்த பத்திரிக்கையாளரையும், பத்திரிக்கை நிர்வாகியையும் போனில் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பத்திரிக்கை நிர்வாகம் சார்பில் தமிழக போலீஸ் டிஜிபி, தென் மண்டல ஐஜி, ராமநாதபுரம் டிஐஜி, ராமநாதபுரம் எஸ்பி ஆகியோரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில்தான் மத்திய அமைச்சரான ஜெகத்ரட்சகனின் பல் மருத்துவக் கல்லூரியில் பெருமளவில் டொனேஷன் வசூலிப்பதாக வட இந்திய தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியிட்டார்கள்.
இந்த நிலையில் ரித்தீஷ் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது குறி்ப்பிடத்தக்கது.
Comments
குற்றம் தமிழ்நாடு threat complaint புகார் நடிகர் actor dgp டிஜிபி tamilnadu ritheesh ரித்தீஷ் கொலை மிரட்டல் dmk mp திமுக எம்பி
Story first published: Friday, June 12, 2009, 14:00 [IST]