For Daily Alerts
Just In
வேலுர் முஸ்லீம் லீக் எம்.பிக்கு துபாயில் பாராட்டு
துபாய்: துபாயில் நடந்த நிகழ்ச்சியில், வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீ்ம் லீ்க் எம்.பி. எம். அப்துல் ரஹ்மான் பாராட்டப்பட்டார்.
துபாய் வந்த அப்துல் ரஹ்மான் அங்குள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு துணைத் தூதர் வேணு ராஜாமணி பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.
சிறப்பாக செயல்படுமாறு அப்துல் ரஹ்மானை வாழ்த்தினார். அப்துல் ரஹ்மானும், ராஜாமணியின் சிறப்பான சேவையைப் பாராட்டி அவருக்குப் பொன்னாடை அணிவித்தார்.
ஈமான் (இந்திய முஸ்லீம்கள் சங்கம்) அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி உடனிருந்தார்.
Comments
இந்தியா எம்பி துபாய் பாராட்டு abdul rahman அப்துல் ரஹ்மான் felicitation iuml வேலூர் honour முஸ்லீம் லீக்
Story first published: Friday, June 12, 2009, 12:37 [IST]