For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமர்த்யா சென்னுக்கு டாக்டர் பட்டம்-கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழம் வழங்குகிறது

By Staff
Google Oneindia Tamil News

Amartya Sen
லண்டன்: நோபல் பரிசு வென்ற இந்திய பொருளாதார நிபுணர் அமர்த்யா சென்னுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இந்திய பொருளாதார மேதை அமர்த்யா சென்னுக்கு கடந்த 1998ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டில் வரும் டிரினிட்டி கல்லூரியில் பேராசிரியர் பதவி அளிக்கப்பட்டது. இப்பதவியில் 2004 வரையிலிருந்த அவர் தற்போது ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் 800வது ஆண்டுவிழா விரைவில் நடக்க இருக்கிறது. அப்போது அமர்தயா சென்னுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க அந்த பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது. இதற்கான விழாவில் இளவரசர் பிலிப், கேம்பிரிட்ஜ் செனட் அவையில் இந்த பட்டத்தை வழங்குவார் என தெரிகிறது.

இந்த விழாவில் அமர்த்யா சென்னை தவிர்த்து, மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அவரது மனைவி மெலின்டா கேட்ஸ், ஈரான் இளவரசர் கரிம் அல் ஹீசைனி ஆகா கான் உள்ளிட்ட 9 பேருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட இருக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X