For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சன் டிவியின் தலைமை செயல் அதிகாரியானார் அஜய் வித்யாசாகர்

By Staff
Google Oneindia Tamil News

Ajay Vidyasagar
சென்னை: ஸ்டார் டிவியின் இந்தியப் பிரிவில் தலைவராகப் பணியாற்றி வந்த அஜய் வித்யாசாகர் சன் டிவி நெட்வோர்க்கின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு்ள்ளார்.

14 ஆண்டுகள் ஸ்டார் இந்தியாவில் நிகழ்ச்சிகள் மற்றும் நியூ மீடியா பிரிவின் தலைவராக பணியாற்றியவர் இவர். 1996ம் ஆண்டு ஸ்டார் டிவியின் சென்னை பிரிவில் தனது பணியைத் தொடங்கிய இவர் பின்னர் மும்பைக்குச் சென்று அதன் வர்த்தகப் பிரிவையும் கையாண்டார்.

ஸ்டார் டிவியின் சேனல் வி தொலைக்காட்சியின் வர்த்தக இயக்குனர் பொறுப்பையும் வகித்துள்ளார்.

2000ம் ஆண்டில் விஜய் டிவியை ஸ்டார் வாங்கியபோது மீண்டும் சென்னை திரும்பி அதன் மண்டல இயக்குனரானார். 2004ம் ஆண்டு மீண்டும் மும்பை திரும்பி ஸ்டார் இந்தியாவின் நிர்வாக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஸ்டார் டிவியின் இன்டர்நெட் பிரிவையும் கவனித்து வந்துள்ள வித்யாசாகர் இப்போது சன் டிவிக்கு வந்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X