For Daily Alerts
Just In
லஞ்சம்-அறநிலையத்துறை இணை ஆணையர் கைது
சென்னை: சென்னையில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில நடந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸ் சோதனையின்போது இணை ஆணையர் லஞ்சம் வாங்கியதாக பிடிபட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் உள்ளது.
அங்கு இன்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது இணை ஆணையர் சுந்தரம், லஞ்சப் பணத்துடன் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது, எதற்காக லஞ்சம் வாங்கினார் என்பது குறித்துத் தெரியவில்லை.