For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கால்நடை மருத்துவம்-ரேங்க் பட்டியல் வெளியீடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கால்நடை மருத்துவ படிப்பகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கட் ஆப் மதிப்பெண் கடந்தாண்டை விட இந்த ஆண்டு வெகுவாக அதிகரித்துள்ளது.

கால்நடை மருத்துவ படிப்ப, உணவு பதனிடல் தொழில் நுட்பத்தில் பி.டெக் மற்றும் இளநிலை மீன் வளம் உள்ளிட்ட படிப்புக்களில் சேரும் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இந்த ரேங்க் பட்டியல் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரி, நாமக்கல் ஆகியவற்றில் பி.வி.எஸ்சி படிக்க மொத்தமுள்ள 192 சீட்களுக்கு 504 மாணவர்கல் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கவுன்சிலிஹ் வரும் ஜூலை 13 மற்றும் 14ம் தேதி சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் வைத்து நடைபெறும். இந்த ஆண்டு கால்நடை துறைக்கு கடந்த ஆண்டை விட அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு கட் ஆப் வெகுவாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு பொது பிரிவினருக்கு கட்-ஆப் 164 ஆக இருந்தது. தற்போது அது 180 ஆக உயர்ந்துள்ளது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 174 ஆகவும், பிற்படுத்த முஸ்லீம் மாணவர்களுக்கு 148 ஆகவும் உள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 169, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 164, அருந்ததியருக்கு 160.25, பழங்குடியினருக்கு 138 ஆக கட்-ஆப் இறுதி செய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X