For Daily Alerts
Just In
மே மாதத்தில் தொழில்துறையின் வளர்ச்சி 2.7 சதவீதம்
டெல்லி: மே மாதத்தில் தொழில்துறையின் வளர்ச்சி 2.7 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஆண்டு 4.4 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடி சூழலில் இந்திய தொழில்துறை வளர்ச்சிப் பாதையில் நடைபோட ஆரம்பித்திருப்பதையே இது காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உற்பத்திப் பிரிவின் உற்பத்தி மே மாதம் 2.5 சதவீதம் உயர்ந்திருந்தது. சுரங்கத் துறை, மின் உற்பத்திப் பிரிவுகள் முறையே 3.7, 3.3 சதவீத வளர்ச்சியைக் கண்டன.
கடந்த ஏப்ரல் மாதத்தில், தொழில்துறை வளர்ச்சி வெறும் 1.2 சதவீதமாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் - மே மாதங்களில் தொழில்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 1.9 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஆண்டு 5.3 சதவீதமாக இருந்தது.
Comments
Story first published: Saturday, July 11, 2009, 15:50 [IST]