For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரே வாரத்தில் ரூ. 1,73,000 கோடி நஷ்டம்

By Staff
Google Oneindia Tamil News

Mukesh Ambani
மும்பை: கடந்த ஒரு வாரத்தில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் மொத்தம் ரூ.1,73,000 கோடியை இழந்துள்ளன.

குறிப்பாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. இந்த நிறுவனப் பங்குகளால் ஏற்பட்டுள்ள நஷ்டம் மட்டும் ரூ.38,985 கோடி.

பங்குப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட விலை சரிவு காரணமாக பெரும் நஷ்டத்தைச் சந்தித்த முதல் 10 நிறுவனங்களில் 6 பொதுத்துறையைச் சார்ந்தவை. மீதி 4 தனியார் நிறுவனங்கள்.

ஓஎன்ஜிஸி நிறுவனம் ரூ.40,872 கோடியை இழந்துள்ளது.

என்டிபிஸி, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. இந்திய உலோகம் மற்றும் கனிம வர்த்தக கழகம் சந்தித்துள்ள நஷ்டம் ரூ.21181 கோடி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X