For Quick Alerts
For Daily Alerts
Just In
'துவண்டது' துவரை விலை!
விண்ணைத் தொட்டுக் கொண்டிருந்த துவரம் பருப்பு விலை, படிப்படியாக சரியத் துவங்கியுள்ளது.
துவரம்பருப்பு கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக அதன் விலை திடீரென்று கிலோ ரூ.100 வரை போனது. இதனால் மற்ற பருப்பு வகைகளுக்கும் டிமாண்ட் அதிகரிக்க, என்ன செய்வதெனப் புரியாமலிருந்தது அரசு. முடிந்தவரை ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கிடைக்க ஏற்பாடு செய்தனர்.
இந்த நிலையில், மீண்டும் கொள்முதல் துவங்கியுள்ளது. இதனால் இப்போது கிலோ ரூ.74 க்கு விற்கிறது துவரம் பருப்பு.
இதைத் தொடர்ந்து மற்ற பருப்பு வகைகளும் விலை குறைய ஆரம்பித்துள்ளன. மேலும், புதிதாக விளைந்த பருப்பு வகைகளின் வரத்து இன்னும் சில வாரங்களில் துவங்கிவிடும் என்றும், அப்போது இந்த விலை மேலும் குறைந்து கிலோ ரூ.40 க்கு விற்கும் சூழல் வரும் என்றும் தமிழக அனைத்து வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Comments
Story first published: Monday, July 27, 2009, 14:43 [IST]