For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு தேவை ஒரு இன்டர்நெட் அமைச்சர்

By Staff
Google Oneindia Tamil News

-பி.ஜி.மகேஷ்

பெங்களூர்: இந்தியாவில் இணையதளத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இணையதளத் துறைக்காக தனியாக ஒரு அமைச்சர் தேவை என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

மத்திய அரசு தற்போது தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்புத்துறைக்கு தனியாக ஒரு அமைச்சரவை வைத்துள்ளது. அது சரியான நடவடிக்கைதான். ஆனால் இந்த இரு துறைகளும் முற்றிலும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாதவை. உண்மையில் இந்த இரு துறைகளும் தனித் தனியாக இயங்க வேண்டியவை. தனித் தனி அமைச்சர்களையும் நியமிக்க வேண்டும். ஆனால் வீங்கிக் கொண்டிருக்கும் மத்திய அமைச்சரவையின் நிலையைப் பார்த்தால் இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.

உலகின் பிற பகுதிகளி்ல் புகழ் பெற்றதைப் போல இந்தியாவில், WiMAX பிரபலமாகவில்லை, வெற்றி பெறவில்லை. இந்தியாவில் வைமேக்ஸ் புகழ் பெறும் காலத்திற்காக நீண்ட நாட்களுக்கு காத்திருக்க வேண்டும் போல் உள்ளது.

காரணம் இதில் சில சிரமங்கள் உள்ளதால். ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு கேபிள் போட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரூ. 1 கோடி வரை செலவிட வேண்டியுள்ளது. இதில் மெட்டீரியல் செலவு ரூ. 10 லட்சம்தான், ஆனால் ரூ. 90 லட்சத்தை அரசுத் துறை நிறுவனங்களுக்காக செலவிட வேண்டியுள்ளது.

கொரிய அரசு நாடு முழுவதும் கேபிள்களைப் போட்டு வைத்து அவற்றை லீசுக்கு விடுகிறது. எந்த தொலைத் தொடர்பு நிறுவனம் பயன்படுத்த விரும்புகிறதோ அது கேபிள்களை லீசுக்கு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் பி.எஸ்.என்.எல். இந்தத் திட்டத்தை ஒத்துக் கொள்ள முன்வராது.

மேலும், மாநில அரசுகளின் red tape பிரச்சினை வேறு. அவ்வளவு சாதாரணமாக அவர்கள் ரோடுகளை 'நோண்ட' விட மாட்டார்கள் (ஆனால் அவர்கள் இஷ்டத்திற்கு தோண்டி அப்படியே போட்டு வைத்திருப்பார்கள், அது வேறு விஷயம்).

இதற்கெல்லாம் முடிவு கட்ட குறைந்தது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இன்டர்நெட் துறைக்கு தனியாக ஒரு அமைச்சர் இருக்க வேண்டும். அல்லது இணை அமைச்சராவது இருக்க வேண்டும்.

இன்டர்நெட் அமைச்சரால் எப்படி உதவ முடியும்...?

இன்டர்நெட் பிரிவுக்கென தனி அமைச்சராக இருந்தால் இணையதள இணைப்புகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர வாய்ப்புள்ளது. இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்க முடியும்.

தற்போது உள்ள இன்டர்நெட் நிறுவனங்களின் பிசினஸ் மேம்படும். அவர்களுக்கு வருவாய் கூடும். அரசுக்கும் கூடுதலாக வரிகள் வந்து சேரும். இன்னும் முக்கியமாக வேலை வாய்ப்புகளும் கூட அதிகரிக்கும்.

நிறைய இந்தியர்கள் வெற்றிகரமான சிறு தொழிலதிபர்களாக வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். இன்டர்நெட் துறை வேகமான வளர்ச்சியைப் பெற்றால், அவர்கள் அதில் ஈடுபட முன்வருவார்கள். இது நாட்டுக்கும் நல்லது.

வருவாய் அதிகரிக்கும்போது புதிய சிந்தனைகளுடன் களத்தில் குதிக்க சிறு தொழிலதிபர்கள் முன்வருவார்கள், அல்லது முனைவார்கள். நிறைய முதலீடுகள் வந்து சேரும். மொத்தத்தில் நமது சுற்றுச்சூழலுக்கு இது நிறைய நன்மைகளைத் தரும்.

2ம் நிலை நகரங்களில் இது பெரும் எழுச்சியை ஏற்படுத்தும். லேட்டஸ்ட் தகவல்களைப் பெற மாணவர்கள் இன்டர்நெட்டை சர்வசாதாரணமாக பயன்படுத்த முன்வருவார்கள்.

இப்படி பல சாதகங்களை உள்ளடக்கியுள்ள இன்டர்நெட் பிரிவை மேம்படுத்த ஏன் மத்திய அரசு ஒரு அமைச்சர் பதவியை உருவாக்கக் கூடாது.

அப்படி ஒரு அமைச்சர் வந்தால் நிச்சயம் என்னைப் போன்ற டாட்காம் ஆட்கள் நிச்சயம் வரவேற்பார்கள்...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X