For Daily Alerts
Just In
ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான், மயில்சாமி அண்ணாதுரைக்கு இன்று டாக்டர் பட்டம்
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை ஆகியோருக்கு அண்ணா பல்கலைக்கழகம் இன்று கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவிக்கிறது.
இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் விழாவில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமை தாங்கி பட்டங்களை வழங்குகிறார்.
உயர் கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான பொன்முடி முன்னிலை வகிக்கிறார். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் பட்டமளிப்பு சிறப்புரை நிகழ்த்துகிறார்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிறப்புரை நிகழ்த்துகிறார்.
மு.க.ஸ்டாலின் கெளரவ டாக்டர் பட்டம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
cinema சினிமா அரசியல் தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் mayilsamy annadurai மயில்சாமி அண்ணாதுரை tamilnadu arrahman ஏஆர்ரஹ்மான் anna university முகஸ்டாலின் doctorate mk stalin
Story first published: Saturday, August 1, 2009, 9:51 [IST]