For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலிபோர்னியா-மெக்சிகோவில் நிலநடுக்கம்

By Staff
Google Oneindia Tamil News

Mexico, California Shaken by Magnitude-6.9 Quake
கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா, அரிசோனா மாகாணங்கள் மற்றும் மெக்சிகோ நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் கலிபோர்னியா வளைகுடா (Gulf of California) அருகே இருந்தது. ரிக்டர் அளவுகோளில் 6.9 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் இல்லை.

கலிபோர்னியா நேரப்படி திங்கள்கிழமை காலை 11 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலத்துக்கு அடியில் 6.2 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது.

நிலநடுக்கம் உணரப்பட்ட மெக்சிகோ பகுதி பாலைவனம் என்பதால் சேதங்கள் ஏற்படவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X