மக்களிடம் குறைகேட்க கமிஷ்னர்கள்- எஸ்பிக்களுக்கு உத்தரவு!
சென்னை: வரும் 1ம் தேதி முதல் பொது மக்களிடம் காவல்துறை எஸ்பிக்களும் கமிஷ்னர்களும் மாதத்தில் 2 நாட்கள் குறை கேட்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் கருணாநிதி தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 13ம் தேதி பொது மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் திங்கட்கிழமைகளில் மாநகரக் காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மூலம் குறை கேட்கும் நாள் கடைபிடிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் முகமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் துறையில் மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாவது திங்கட்கிழமைகளில் பொதுமக்களிடம் குறை கேட்கும் நாள் கடைப்பிடிக்கப்படும்.
அந்நாளில், அந்தந்த மாநகரக்காவல் ஆணையாளர்கள் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தங்கள் தலைமையிடத்தில் தங்கி, பொது மக்களைச் சந்தித்து, அவர்கள் அளிக்கும் விண்ணப்பங்களைப் பெறுவதுடன், அவர்களுக்கு ஒப்புகைக் கடிதம் வழங்கி, அவர்கள் கூறும் குறைபாடுகளை உடனடியாகக் களைவதற்காக விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இந்தக் குறை கேட்கும் நாள் திட்டம் தமிழகக் காவல் துறையில் 1.9.2009 முதல் நடைமுறைக்கு வரும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications