For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ,. 25 கோடி தமிழக சந்தனம்

By Staff
Google Oneindia Tamil News

Tirupati Balaji
திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் அபிஷேக சந்தனத்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்க ரூ. 25 கோடிக்கு தமிழத்திடமிருந்து 30 டன் சந்தன கட்டைகள் வாங்கப்பட்டுள்ளன. இது அடுத்த 50 ஆண்டுகளுக்கான தேவையை போக்கும் என தெரிகிறது.

இந்தியாவின் பணக்கார கடவுள் திருப்பதி வெங்கடாசலபதி. இவருக்கு சந்தன காப்பு சாத்துதல், அபிஷேகம், திருமஞ்சனம் போன்ற விசேஷ வைப்பவங்களுக்காக ஆண்டு தோறும் ஆயிரம் கிலோ கிராம் சந்தனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு 500 கிலோ என்றிருந்த சந்தன பயன்பாடு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக புதிதாக கொண்டு வரப்பட்ட கல்யாண உத்சவம், தாலித கோவிந்தம் போன்ற நிகழ்ச்சிகளால் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானி்ன் சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் சந்தனம். முதல் தரமான ஜக்போகல் வகையை சார்ந்ததாகும். இந்த வகை சந்தனங்கள் திருப்பதியில் உள்ள ஷேசாசலம் மலை, சத்யமங்கலம் காடு மற்றும் கர்நாடகவின் சிமுகா பகுதிகளில் மட்டுமே வளர்ந்து வருகிறது.

இது அதிகம் தரமானது என்பதால் கடத்தல்காரர்களால் அதிகம் கடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது இந்த சந்தன மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இந்த சந்தன மரங்களை விற்று வந்த திருப்பத்தூர், சத்தியமங்கலம் டெப்போக்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன.

சேலம், சிமுக, மைசூர் போன்ற இடங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த சந்தனத்துக்கு
ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2004ல் ஒரு டன் ரூ. 35 லட்சத்துக்கு விற்ற இவை தற்போது டன் ரூ. 80 லட்சத்துக்கு விற்கப்படுகிறது.

சில சமயங்களில் எவ்வளவு கொடுத்தாலும் கிடைப்பதில்லை. இதையடுத்து கடந்த கிபி 900 முதல் திருப்பதி ஏழுமலையானுக்கு செய்யப்பட்டு வரும் ஜக்போகல் சந்தன அபிஷேகம் தடைப்பட்டு விடலாம் என்றும், இந்த முதல் தர சந்தனத்துக்கு பதிலாக வேறு வகைகளை பயன்படுத்த நேரிடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து திருப்பதி திருமலை தேவஸ்தானம், திருப்பதியில் உள்ள எஸ்வி உயிரியியல் பூங்கா பகுதியில் 2,500 ஏக்கர் அளவில் சந்தன மரங்களை நட திட்டமிட்டது. ஆனால், இதற்கு பூங்கா அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

தேவஸ்தானம் விரும்பினால் 40 ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் வாடகையில் தருகிறோம். அதை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றனர். ஆனால், இதற்கு தேவஸ்தானம் சம்மதிக்கவில்லை.

தற்போத தேவஸ்தானம் தங்களுக்கு சொந்தமான திருப்பதி மலை பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஜக்போகல் சந்தன மரங்களை வளர்த்து வருகிறது. இதன்மூலம் சந்தன தேவையை ஈடுகட்ட முயற்சித்துள்ளது. என்றாலும் இந்த மரங்கள் வளர்ந்து சந்தனத்தை கொடுக்க சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் அதுவரை என்ன செய்வது என்று ஆலோசித்தது.

இதையடுத்து அவர்கள் சுந்திர தினமான நேற்று ரூ. 25 கோடி மதிப்புள்ள சுமார் 30 டன் ஜக்போகல் சந்தனங்களை தமிழகத்தின் சேலம் டெப்போவில் இருந்து வாங்கியுள்ளனர். இதன்மூலம் திருப்பதி ஏழுமலையானுக்கு அடுத்த 50 ஆண்டுகளுக்கு எந்த சந்தன தட்டுபாடும் வராதாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X