For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திவால் நோட்டீஸ் தருகிறது ரீடர்ஸ் டைஜஸ்ட்!

By Staff
Google Oneindia Tamil News

Readers Digest to announce Bankruptcy
நியூயார்க்: உலகின் மிகப் பிரபலமான பத்திரிகைகளுள் ஒன்றான ரீடர்ஸ் டைஜஸ்ட்டை வெளியிடும் ரீடர்ஸ் டைஜஸ்ட் அஸோஸியேஷன் நிறுவனமும் திலாவ் நோட்டீஸ் தரப்போவதாக அறிவித்துள்ளது.

விற்பனையில் சரிவு, தொடர் நஷ்டம் மற்றும் கடன்காரர்களின் நெருக்குதல் காரணமாகவே இந்த சட்டப்பூர்வ பாதுகாப்பா நாடுவதாக ரீடர்ஸ் டைஜஸ்ட் அறிவித்துள்ளது.

1922-ம் ஆண்டு மாதப் பத்திரிகையாக துவங்கப்பட்டது ரீடர்ஸ் டைஜஸ்ட். இன்று 70 நாடுகளில் 21 மொழிகளில் 40 மில்லியன் மக்கள் படிக்கும் பெரிய பத்திரிகையாகத் திகழ்கிறது.

இந்தியாவிலும் இந்தப் பத்திரிகை வெளியாகிறது.

ஆனால் 2005-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பத்திரிகையின் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

2007-ல் இந்தப் பத்திரிகையின் உரிமையை மற்றும் அதன் பதிப்பகத்தை வாங்கியது ரிப்பிள்வுட் ஹோல்டிங்ஸ். ஆனாலும் விற்பனை சரிவைத் தடுக்க முடியவில்லை. கடந்த ஆண்டுவரை 8 மில்லியனாக இருந்த சர்க்குலேஷன் இந்த ஆண்டு 5.5 மில்லியனாகக் குறைந்துவிட்டதால், பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இன்னொரு பக்கம் இந்த நிறுவனத்துக்கு கடன் கொடுத்தவர்கள் பெரும் நெருக்குதல்களைக் கொடுத்து வருகிறார்கள்.

எனவே, தங்களைத் தற்காத்துக் கொள்ள அமெரிக்க சட்டத்தின் பிரிவு 11-ஐப் பயன்படுத்தி திவால் நோட்டீஸ் தர ரீடர்ஸ் டைஜஸ்ட் முடிவெடுத்துள்ளது.

கடன்காரர்கள் நெருக்கடி மற்றும் இதர பொறுப்புகளிலிருந்து இதனால் விடுதலைப் பெற முடியும். தங்களின் அமெரிக்க பிரிவுக்கு மட்டுமே இந்த திவால் நோட்டீஸ் அறிவிப்பு என அப்பத்திரிகை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்துடன் சேர்த்தால் அமெரிக்காவில் மட்டும் இந்த பொருளாதார வீழ்ச்சி காலத்தில் திவால் நோட்டீஸ் கொடுத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை 13 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் திவாலைத் துவங்கி வைத்தது லேஹ்மன் பிரதர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X