For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பி.இ. படிப்பில் சேரும் தமிழ் மீடியம் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் மீடியத்தில் பிளஸ்டூவை முடித்து விட்டு பி.இ. படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளாக அதிகரித்த வண்ணம் உள்ளது.

நுழைவுத் தேர்வு என்ற பெயரில் இருந்து வந்த பெரும் முட்டுக்கட்டை நீக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

2007ம் ஆண்டுடன் நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு மூடு விழா கண்டது. இதையடுத்து தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்களும் பெரும் ஆர்வத்துடன் பி.இ படிப்பில் சேர்ந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு 35 ஆயிரத்து 434 தமிழ் மீடியம் மாணவர்கள் பி.இ. படிப்பில் சேர்ந்துள்ளனர். அரசுக் கோட்டாவின் கீழ் இவர்கள் சேர்ந்துள்ளனர். பி.இ படிப்பில் சேர்ந்துள்ள மொத்த மாணவர்களான 83 ஆயிரத்து 552 பேரில் இது 42.41 சதவீதம் ஆகும்.

கடந்த 2007ம் ஆண்டு பி.இ. படிப்பில் 19 ஆயிரத்து 966 (35.63) தமிழ் மீடியம் மாணவர்களே பி.இ. அல்லது பி.டெக்கில் சேர்ந்தனர். கடந்த ஆண்டு இது 34,309 (43.83 சதவீதம்) ஆக உயர்ந்தது.

தற்போது பி.இ. படிப்பில் சேர்ந்துள்ள தமிழ் மீடியம் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் முக்கியமான ஒன்று.

நுழைவுத் தேர்வு அமலில் இருந்த காலகட்டத்தில், 2005ம் ஆண்டு வெறும் 26.34 சதவீதம் பேரும், 2006ம் ஆண்டு 27.86 சதவீதம் பேரும் மட்டுமே பி.இ. படிப்பில் சேர முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நுழைவுத் தேர்வு தடை தகர்க்கப்பட்டு விட்டதால் கிராமப்புற மாணவர்களுக்கும் பி.இ., பி.டெக் படிப்பு எளிதாகியுள்ளது.

நுழைவுத் தேர்வு இல்லாததால், கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரம் மேலும் உயரும் அரிய வாய்ப்பும் கிடைத்துள்ளது. மற்றவர்களைப் போல அவர்களும் பொறியாளர்களாக தங்களது கிராமத்தினர் முன் நிற்கும் பெரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

நுழைவுத் தேர்வு இருந்தபோது அதற்கனெ தனிப் பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. இதற்காக கோச்சிங் சென்டர்களை நாடும் நிலையில் மாணவர்கள் இருந்தனர். வசதி படைத்த, நகர்ப்புற மாணவர்களுக்கு இது எளிதாக இருந்தது. ஆனால் கிராமப்புற மாணவர்களுக்கு சரியான பயிற்சி கிடைக்காத நிலை. இதன் காரணமாக அவர்களால் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக எழுந்து நிற்க முடியாத அவலம் இருந்தது.

இந்த அவலத்தைத் துடைத்து நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது கிராமப்புற மாணவர்கள் தங்களது பிளஸ்டூ படிப்பை வைத்தே தற்போது பி.இ, பி.டெக் போன்ற படிப்புகளில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், இந்த கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சின்னச் சிக்கலும் உள்ளது. அது போதிய ஆங்கில அறிவு இல்லாததும், பாடங்களைப் புரிந்து கொள்வதில் உள்ள சிரமங்களுமே. தமிழ் மீடியத்திலேயே படித்து விட்டு வந்ததால், இந்த மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பாடங்களைப் புரிந்து கொள்வதும், வகுப்புகள் மற்றும் கல்லூரிகளில் ஆங்கிலத்தில் உரையாடல்களை மேற்கொள்வதும் சிரமமாக உள்ளது.

இதையும் சரி செய்ய அண்ணா பல்கலைக்கழகம் தற்போது களம் இறங்கியுள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறுகையில், எங்களது பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில், மாணவர்களின் அறிவுத்திறன், தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 4.93 கோடி நிதியுதவியை ஒதுக்கியுள்ளது. இந்த வாரத்திற்குள் முதல் தவனை நிதி வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம்.

இதை வைத்துக் கொண்டு வேலைவாய்ப்புகளுக்கேற்ப தங்களை மாணவர்கள் தயார்படுத்திக் கொள்ள, திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

தமிழ் மீடியம் மாணவர்களால் வகுப்புகளைப் புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளதாக கூறப்படுவதை நான் ஏற்க மாட்டேன். பொறியியல் படிப்பு என்பது அதிகம் தியரிகளை உள்ளடக்கியது அல்ல. எனவே தமிழ் மீடியம் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு சிரமம் என்று கூறுவதை நான் ஏற்க மாட்டேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X