For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி வீழ்ச்சி

By Staff
Google Oneindia Tamil News

Wind power generation hits low in TN
சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் நிர்ணயித்த இலக்கில் பாதியளவு கூட மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் காற்றாலை மூலம் அதிக அளவில் மின்சாரம் கிடைத்து வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1315 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டது. அதாவது சராசரியாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 42 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்தது.

ஆனால், உற்பத்தி தற்போது 630 மில்லியன் யூனிட் என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. இந்த மாதம் ஒரே ஒரு நாள் (46 மில்லியன் யூனிட்) மட்டும் தான் சராசரி அளவான 42 மில்லியன் யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மின்சார உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டது.

11ம் தேதி 41 மில்லியன் யூனிட் தயாரிக்கப்பட்டது. 16ம் தேதி அது 13 மில்லியன் யூனி்ட் ஆகவும், அதன் பின்னர் தினமும் 3 மில்லியன் யூனிட்டுக்கும் குறைவாக தான் கிடைத்து வருகிறது. இதையடுத்து இந்த ஆண்டு காற்றாலை சீசன் கிட்டதட்ட முடிந்துவிட்டதாக கருதப்படுகிறது.

அதேபோல் கடல் அலைகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சார அளவும் தற்போது குறைந்துள்ளது. கடந்த ஆண்டு அலைகள் மூலம் 2,190 மில்லியன் யூனி்ட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இந்த ஆண்டு கடந்த 19ம் தேதி வரை 1,637 மில்லியன் யூனி்ட்கள் கிடைத்துள்ளது.

ஆனால், கடந்த மூன்று மாதத்தில் இந்த உற்பத்தி சுமார் 550 யூனிட்களாக உள்ளது. இதையடுத்து வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக மின்சார வாரியத்தின் கையிருப்பு கடந்த ஆண்டை விட அதிகமிருப்பது ஆறுதலான செய்தி. கடந்த ஆண்டு 826 மில்லியன் யூனிட்டாக இருந்த கையிருப்பு தற்போது 1,125 யூனிட் உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X