For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையின் போர் குற்றங்கள்: நிர்வாணமாக்கி, கண்ணைக் கட்டி, சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்

By Staff
Google Oneindia Tamil News

Channel 4 exposes Srilanka's War crime against Tamils!
லண்டன்: வன்னியில் தமிழர்களுக்கு எதிரான கடுமையான தாக்குதல்களை மேற்கொண்ட இலங்கை ராணுவம், மனித குலமே வெறுக்கும் வகையிலான கொடிய வன்முறைகளைக் கட்டவிழ்த்துள்ளது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

கையில் சிக்கிய தமிழர்களை எல்லாம் ஆண்-பெண் என்ற பாகுபாடில்லாமல் நிர்வாணமாக்கி, கண்களையும் கட்டி சுட்டுக்கொல்லும் கொடூரமான காட்சிகளை பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான 'சேனல் -4' செய்தியாளர் ஜொனதன் மில்லர் வெளியிட்டுள்ளார்.

'இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' (Journalists for Democracy in Sri Lanka) என்ற அமைப்பு, இந்தக் காட்சிகள் கடந்த ஜனவரி 2009ல் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாகவும், இதே காலப் பகுதியில் வெளிநாட்டு செய்தியாளர்கள் போர்ப் பகுதிகளுக்குச் செல்வதை இலங்கை அரசு தடை செய்துவிட்டிருந்தது எனவும் 'சேனல் - 4' தெரிவித்துள்ளது.

இந்தக் காட்சிகளை உலகின் முன் வைத்துள்ள ஜொனதன் மில்லர், "இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு இன்னும் என்ன ஆதாரங்கள் வேண்டும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் இதனை லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் மறுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் மட்டுமே தமது படையினர் ஈடுபட்டனர் என தூதரகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் போலியானதாக இருக்கும் என்றும் கூசாமல் ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளது இலங்கை. ஆனால் இதனை சோதித்துப் பார்த்த செய்தியாளர்கள் மற்றும் நிபுணர்கள் இது நிஜமான காட்சிப் பதிவுகள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சேனல் 4 நிர்வாகமும் இந்த வீடியோ உண்மையானது என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே உலகின் கவனத்துக்கு அதை ஒளிபரப்பியதாக தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு:

http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6809968.ece

இலங்கை மறுப்பு:

ஆனால், அப்பாவித் தமிழர்களின் கண்கள், கைகளை கட்டி விட்டு பின்புறம் இருந்து சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக சுடும் காட்சிகள் அடங்கிய வீடியோ பொய்யானது என்று கூறியுள்ளது இலங்கை அரசு.

இதுகுறித்து டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இலங்கையின் பெயரைக் கெடுக்க வெளியிடப்பட்ட இதுபோன்ற பொய்யான பல வீடியோ காட்சிகளை நாங்கள் ஏற்கனவே பார்த்து விட்டோம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மட்டுமே இலங்கைப் படைகள் ஈடுபட்டிருந்தன. இந்த வீடியோ பொய்யானது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X