• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராஷ்டிரபதி பவனில் திருடர்கள் கைவரிசை - கம்ப்யூட்டர் திருட்டு

By Staff
|

Rashtrapati Bhavan
டெல்லி: நாட்டிலேயே மிக பலத்த பாதுகாப்பான இடமா கருதப்படும் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில், திருடர்கள் புகுந்து கம்ப்யூட்டரையும், உடற்பயிற்சி செய்யும் கருவியையும் திருடிச் சென்றுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமை இரவு இந்த திருட்டு நடந்துள்ளது. ஆனால் இன்றுதான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒரு கம்ப்யூட்டர் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த டம்புள்ஸ் ஆகியவற்றை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக சாணக்கியபுரி காவல் நிலையத்தில் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X