For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிக வருவாய் ஈட்டும் கிரிக்கெட் வீரர் டோணி: போர்ப்ஸ்

By Staff
Google Oneindia Tamil News

Dhoni
நியூயார்க்: விளம்பரம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய கேப்டன் டோணி பெற்று இருக்கிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள அதிக சம்பாத்தியம் ஈட்டும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் அவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் வரிசையில், சச்சின், யுவராஜ், டிராவிட், கங்குலி ஆகியோரும் இந்த லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளனர்.

இது குறித்து போர்ப்ஸ் பத்திரிகை வெளியி்ட்டுள்ள பட்டியல்...

கிரிக்கெட் வீரர்களின் கடந்த 12 மாத வருமானத்தை வைத்து இது கணக்கிடப்பட்டுள்ளது. தேசிய அணியில் அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், கிளப்கள் மூலம் கிடைக்கும் வருமானம், விளம்பரம் ஆகியவை கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது.

முதல் நான்கும் இந்தியாவுக்கே...

அதிக வருமானம் கொண்ட கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் முதல் நான்கு இடங்களையும் இந்திய வீரர்களே பிடித்துள்ளனர்.

கேப்டன் டோணிக்கு வருமானமாக 10 மில்லியன் டாலர் கிடைத்துள்ளது. அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் வரிசையில் இவருக்கு தான் முதலிடம். அவர் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் சராசரியாக 5,426 டாலர் கிடைக்கிறது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு அடுத்தபடியாக 17 கார்பரேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் அவர் நடித்து வருகிறார்.

இரண்டாவது இடத்தில் 8 மில்லியன் டாலர் சம்பாதித்த மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இருக்கிறார். மூன்றாவது இடத்தை யுவராஜ் சிங்கும் (5.5 மில்லியன் டாலர்), நான்காவது இடத்தை ராகுல் டிராவிட்டும்(5 மில்லியன் டாலர்) பெற்றுள்ளனர்.

ஐந்தாவது இடத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆன்ட்ரூ பிளின்டாப் (4 மில்லியன் டாலர்) பிடித்துள்ளார். ஆறாவது இடத்தை முன்னாள் இந்திய கேப்டன் கங்குலியும்(3.5 மில்லியன் டாலர்), ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்கும் பிடித்துள்ளனர்.

எட்டாவது இடத்தை இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் (3 மில்லியன் டாலர்), ஆஸ்திரேலியாவின் பிரட் லீ ஆகியோர் பெற்றுள்ளனர். 10வது இடத்தில் ஆஸ்திரேலிய துணை கேப்டன் மைக்கேல் கிளார்க் (2.5 மில்லியன் டாலர்)இருக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X