For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தடகள சாம்பியன் செமன்யா பெண் அல்ல-சர்ச்சை

By Staff
Google Oneindia Tamil News

Semenya
ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் தடகள வீராங்கனை கேஸ்டர் செமன்யா முழுமையான பெண் அல்ல. அவர் இருபாலும் கலந்தவர் என்று புதிய சர்சசை கிளப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பெண்கள் தடகள போட்டிகளில் பங்கேற்பதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

18 வயதான செமன்யா சமீபத்தில் பெர்லினில் நடந்த உலக கோப்பை சாம்பியன்ஷிப் தொடரில் 800 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார். அவர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் வெகு பிரபலம்.

இந்நிலையில் அவர் ஒரு முழுமையான பெண் அல்ல. அவர் ஒரு ஹெர்மோபுரோடைட் (இரு பாலின தன்மை கொண்டவர் என சர்வதேச தடகள சம்மேளனம் (ஐஏஏஎப்) ஒரு புதிய குண்டைத் தூக்கி போட்டுள்ளது. இதையடுத்து அவரது தங்கம் பதக்கம் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஐஏஏஎப் அமைப்பின் பொது செயலாளர் பியரி வெய்ஸ் கூறுகையில், செமன்யா பெண் என்பது உண்மை தான். ஆனால், அவர் 100 சதவீத பெண் அல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும் ஐஏஏஎப் அதிகாரி ஒருவர் கூறுகையில், செமன்யாவுக்கு ஆண்களை போல் விந்து பைகள் இருக்கிறது. ஆனால், பெண்களுக்குரிய கருப்பை மற்றும் சினைமுட்டை ஆகியவை இல்லை என்றார்.

நிறவெறி காரணம்...

செமன்யாவின் பயிற்சியாளர் மைக்கேல் சீம் கூறுகையில், இந்த சர்ச்சையால் அவர் நாளை நடக்கும் தென் ஆப்ரிக்காவின் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் நடக்கும் 4,000 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொள்ள முடியுமா என்பது தான் எனது கவலை என்றார்.

ஆனால், ஆப்பிரிக்க தேசிய இளைஞர் லீக் சங்கம் இதை மறுத்துள்ளது. ஐஏஏஎப் நிறவெறி பிடித்து இது போன்ற குற்றச்சாட்டுக்களை கூறுவதாக தெரிவித்துள்ளது.

மேலும், செமன்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தென் ஆப்பிரிக்க தடகள சங்க தலைவர் பதவியிலிரு்து லியோனார்டு சூவின் விலகியுள்ளார். அவர் கூறுகையில், இது போன்ற வம்பு பேச்சுகளில் நாங்கள் ஈடுபட விரும்பவில்லை. இதையெல்லாம் மனதில் வைத்து கொள்ள வேண்டாம் என செமன்யாவிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.

ஆனால், ஐஏஏஎப் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் அனைத்தும் தென் ஆப்பிரிக்காவில் தான் நடத்தப்பட்டன என பதிலடி கொடுத்துள்ளது.

பொறாமையில் பேசுகின்றனர்...

இது குறித்து செமன்யாவின் தாயார் டோர்கஸ் செமன்யா கூறுகையில், பொறாமை பிடித்தவர்கள் சிலர் இது போன்ற தவறான தகவல்களை வெளியி்ட்டு வருகி்ன்றனர். அவள் ஆண் என சொல்வது முட்டாள்தனமானது என்றார்.

இதே போன்ற சர்ச்சையில் கடந்த 2006ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளி வென்ற தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன் சிக்கி, அவரது பதக்கம் பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X