For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொக்ரான் சோதனை: சந்தானம் கருத்து அபத்தமானது - நாராயணன்

By Staff
Google Oneindia Tamil News

Narayanan
டெல்லி: பொக்ரான்-2 சோதனை முடிவுகள் குரித்து முன்னாள் டிஆர்டிஓ விஞ்ஞானி சந்தானம் கூறியுள்ள கருத்துக்கள் கொடுமையானவை, அபத்தமானவை. இந்தியாவின் தெர்மோநியூக்ளியார் திறமைகள் முழுமையான வெற்றி பெற்றவை என்று கூறியுள்ளார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அணு சக்தி கமிஷனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கடந்த வாரம் 1998ல் நடந்த அணு சோதனைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு, அவை முழு வெற்றி பெற்றன என்று கூறியுள்ளனர். இதற்கு மேலும் அரசிடமிருந்து எந்தவித விளக்கமும் அளிக்கத் தேவையில்லை.

1998 சோதனை குறித்து அணு சக்தி கமிஷன் முழு திருப்தி அடைந்துள்ளது. இதற்கு மேலும் இதுகுறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் நாராயணன்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X