For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவில் மேலும் 120 ரெஸ்டாரண்ட்களைத் திறக்கும் மெக்டோனால்ட்ஸ்!

Google Oneindia Tamil News

McDonalds to open 120 outlets in India
டெல்லி: இந்தியாவில் ரூ 500 கோடி முதலீட்டில் அடுத்த மூன்றாண்டுகளில் 120 ரெஸ்டாரண்ட்களைத் திறக்கிறது அமெரிக்காவின் மெக்டோனால்ட்ஸ் நிறுவனம்.

கன்னாட் பிளாஸா மற்றும் ஹார்ட்கேஸில் ரெஸ்டாரண்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் ஆண்டுக்கு 40 உணவகங்களைத் திறந்து வருகிறது மெக்டோனால்ட்ஸ்.

தற்போது இந்தியாவில் சிறியதும் பெரியதுமாக 170 உணவகங்களை நடத்தி வருகிறது மெக்டோனால்ட்ஸ். இவற்றில் கன்னாட் பிளாஸா கட்டுப்பாட்டில் 98 உணவகங்கள் உள்ளன. இவை அனைத்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் செயல்படுபவை. மேற்கு மற்றும் தெற்கு இந்தியாவில் 78 உணவகங்களை மெக்டொனால்ட்ஸ் சார்பில் நிர்வாகிக்கிறது ஹார்ட் கேஸில்.

ஒரு நாளைக்கு 5 லட்சம் வாடிக்கையாளர்களை இந்த உணவகங்கள் திருப்திப்படுத்துவதாகக் கூறுகிறார் ஹார்ட் கேஸில் நிறுவனத்தின் அமித் ஜா.

இப்போது இந்த எண்ணிக்கையை இருமடங்காக்கும் பொருட்டு, மேலும் 120 உணவகங்களை திறக்கிறது மெக்டொனால்ட்ஸ். இதற்காக ரூ.500 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், பெரும்பாலான உணவகங்களை தெற்கு மாநிலங்களில் திறக்க முடிவு செய்துள்ளதாகவும் அமித் ஜா தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X