For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவின் 60வது தேசிய தின கொண்டாட்டம்-பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு

Google Oneindia Tamil News

Hu strikes a confident tone in 60th National Day
பெய்ஜிங்: கம்யூனிஸ ஆட்சி மலர்ந்து 60 ஆண்டுகள் முடிந்ததை சீனா நேற்று உற்சாகமாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாடியது. விமான படை மற்றும் ராணுவ வாகன அணிவகுப்புகளின் மூலம் உலக நாடுகளுக்கு தனது பலத்தை வெளிகாட்டியது.

சரியாக 60 ஆண்டுகளுக்கு முன் அக்டோபர் 1, 1949ம் ஆண்டு சீனாவில் புரட்சி ஏற்பட்டது. மா சே துங் தலைமையில் கம்யூனிஸ ஆட்சி மலர்ந்தது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் அக்டோபர் 1ம் தேதி தேசிய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்தின் 60வது ஆண்டு கொண்டாட்டம் நேற்று சீனாவில் பிரமாண்டமாக நடந்தது. பெய்ஜிங் நகரின் தியானென்மென் சதுக்கத்தில் நடந்த பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பை 30,000 சீனர்களை கூடி நின்று பார்த்தனர்.

இந்த விழாவுக்கு கடுமையான கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்பட்டைத அடுத்து பாதுகாப்பு கருதி மக்கள் தங்களது வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும், அவர்கள் டிவியில் நிகழ்ச்சிகளை பார்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

விழாவில் உலகின் மிகப்பெரிய ராணுவ கொண்டிருக்கும் சீனா தனது பலத்தை உலக நாடுகளுக்கு காட்டும் வகையில் தனது கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை, தனது புதிய விண்வெளி திட்டங்கள் ஆகியவற்றை காட்சிக்கு வைத்தது.

கம்யூனிஸ்ட் ஆட்சியின் 60ம் ஆண்டு தினத்தைக் குறிக்கும் வகையில் 60 அலங்கார வாகனங்கள் அணிவகுத்தன. விமான படை ஜெட் விமானங்கள் சாகச அணிவகுப்பு நடத்தின. தரைப்படை பீரங்கிகள் மற்றும் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அதிபர் ஹூ ஜின்டா பேசுகையில்,

தற்போது உலகின் கிழக்கே சீனா உயர்ந்து நிற்கிறது. நவீனமயமத்துடன் உலகத்தையும், எதிர்காலத்தையும் அணைத்து செல்ல இருக்கிறது. சீன மக்கள் தங்கள் வளர்ச்சியை கண்டு பூரிப்படைத்திருக்கிறார்கள். தங்களது தாய்நாட்டை நினைத்து பெருமையடைகிறார்கள்.

60 ஆண்டுகளாக சீனாவை சோஷலிசம் தான் காப்பாற்றியுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X