For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கிகள் திவால்... சதத்தை நெருக்கும் யுஎஸ்!

Google Oneindia Tamil News

Bank
அமெரிக்காவில் திவாலான வங்கிகளின் எண்ணிக்கை விரைவில் சதத்தை நெருங்கப் போகிறது. இரு தினங்களுக்கு மூடப்பட்ட மூன்று வங்கிகளையும் சேர்த்தால் இதுவரை 98 வங்கிகள் மூடுவிழா கண்டுள்ளன.

பொருளாதார மந்தம், நிதி நெருக்கடி மற்றும் வராக்கடன் போன்றவற்றால் அமெரிக்காவின் நிதித் துறையே ஆட்டம் கண்டுவிட்டது.

கடந்த அக்டோபர் 2ம் தேதி வரை 95 வங்கிகள் மூடப்பட்டன. வெள்ளிக்கிழமை மட்டும் மேலும் 3 வங்கிகள் மூடப்பட்டன.

அவை, வாரன் வங்கி, ஜென்னிங்ஸ் ஸ்டேட் வங்கி மற்றும் சதர்ன் கொலராடோ நேஷனல் வங்கி.

இந்த வங்கிகள் மூடப்பட்டதால் 293.3 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல வங்கிகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது. இதனால் விரைவில் அமெரிக்காவில் திவாலான வங்கிகள் எண்ணிக்கை 100-ஐத் தொடவிருக்கிறது.

இன்றைய நிலவரப்படி மேலும் 416 வங்கிகளின் நிலைமை கவலைக்குரியதாக உள்ளதாக அமெரிக்காவின் இன்ஷ்யூரன்ஸ் துறை தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X